பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/252

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

aş1 நாம் அறிந்த வி.வா.க.

மேவிய கன்மன்றல் விசாரிக்க எண்ணியே ஆவலொடும் செல்ல அணைக்தேமால்-தாவித் தரையில் படர்ரிக்ஷாக் காரரே சற்றே விரைவில் சகடம் விடும்’

என ஒரு பாடலை இயற்றிச் சொன்னார். அதைக் கேட்டவுடன் பூரீமத் ஐயர் வாய்விட்டுச் சிரித்தார். *இன்னும் ஒரு முன்ற சொல்ல வேண்டும்’ என்றார்.* இவரது பாடல் என்றால் பூரீமத் ஐயருக்கு அவ்வளவு ஆனந்தம்! இதுதான் அவருக்கு விளையாட்டு.

சொற்பொழிவினும் தமிழ்த் தொண்டே சிறந்தது:

மற்றப்படி சொற்பொழிவு ஆற்றப் போகவேண்டும் என்பதில் அவர் விருப்பம் காட்டியதில்லை. அழைக்கும் இடங்களுக்கெல்லாம் போய்க்கொண்டிருந்தால் நம் பணி தடைப்படும்’ ’ என்பார்.

என்றாலும், பல பிரபுக்கள், கனவான்கள் மிக்க ஆர்வத்தோடு அவரைத் தங்கள் தங்கள் இடங்களுக்கு வந்து பேச வருந்தி அழைப்பார்கள்; கடிதம் எழுது வார்கள். பூரீமத் ஐயரோ மிக நாசுக்காக வ்ர முடியாமைக்கு ஏதேதோ காரணம் சொல்லித் தட்டிக் கழித்துவிடுவார். , -

ஒரு நாள் இரண்டு பேர் வந்தார்கள். வில்லிவாக்கம் அகத்தீசுவரர் கோவிலில் நடைபெறவுள்ள திருமுறை விழாவுக்கு பூரீமத் ஐயரைத் தலைமை தாங்கிப் பேச அழைத்தார்கள். தோற்றத்திலேயே அவர்களது ஏழைமை புலப்பட்டது. பேச்சிலே தமிழார்வம் நன்கு தெரிந்தது. பூரீமத் ஐயர் அவர்களது அழைப்பை உடனே ஏற்று விட்டார். - -

  • 19-3-30: உ. வே. சாமிநாதையர் குறிப்பு -

திருவான்மியூர் நூலகம். * :