பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - - ass

பஇவரையும் நான் அழைத்து வருகிறேன். நன்றாகப் பேசுவார். இவருடைய பெயரையும் சொற்பொழிவு ஆற்றுவோர் வரிசையில் சேர்த்துக்கொள்ளுங்கள்’ என அவர்களிடம் சிபார்சு செய்தார். வந்தவர்கள் பெரிதும் மகிழ்ச்சியுடன் சொன்றார்கள். அப்புறம் பூரீமத் ஐயர் சொன்னார்: : - -

  • பெரிய பிரபுக்கள், கனவான்களுடைய அழைப்பை: ஏற்றுச் சென்றாலாவது நமக்குக் காசுபணம் கிடைக்கும், இவர்களது அழைப்பை ஏற்றுப் போவதால் நமக்குத்தானே செலவு எனத் தோனறலாம். ஆனாலும் இந்த மேடைகளில் நமக்குக் கிடைக்கிற மகிழ்ச்சியும் ஆத்ம திருப்தியும் அந்தப் பெரிய இடங்களில் எல்லாம் கிடைக்காது. கவிஞர் கோமான் பிள்ளையவர்களது வாழ்க்கை

அநுபவமே, போதும்’ என்று மேலும் கூறலானார்.

X x 。X,

ஆசானின் ஆசான் கண்ட அநுபவங்கள்பற்றி :

ஒரு பெரிய பிரபு, தமது விசாலமான வீட்டில் இருந்து பெரிய புராணப் பிரசங்கம் செய்யப் பிள்ளையவர்களை அழைத்தார். பிள்ளையவர்களும் இசைந்தார்கள்.

அந்தப் பிரபுவின் வீட்டில் பிள்ளையவர்களது சொற். பொழிவு நடைபெற்றது. நூற்றுக்கணக்கானவர்கள் வந்து கவிஞர்கோமானின் சொற் .ெ பா ழி ைவ க் கேட்டு மகிழ்ந்தார்கள். .

அந்தப் பிரபுவோ போவோர் வருவோரிடமெல்லாம், * பிள்ளையவர்களது பிரசங்கம் நம்ம வீட்டில் எப்படி நடக்கிறது, பார்த்தீர்களா?’ எனத் தற்பெருமையாகச் சொல்லிக் சொல்லி மகிழ்ந்தார்,

பிறரின் பெருமைகளைக் கண்டு நாமும் பூரிப்படையப் பழக வேண்டும்; அப்படிப் பழகாத ஒருவர் அந்தந்: பிரபுவிடம் இப்படிச் சொன்னார்: புராணப் பிரசங்கம் நன்றாகத்தான் இருக்கிறது. கோவில் போன்ற பொது