பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

25s நாம் அறிந்த கி.வா.ஜ.

இடத்தில் வைத்திருக்கலாம். வீட்டிலே வைத்திருப்பது

தான் சுபகரமாக இல்லை. அந்தக் கதைகளின் முடிவிலெல்லாம் இ ற ந் தார் எ ன் றே வருகிறதே; கவனித்தீர்களா?’

அவ்வளவுதான்; தமது செல்வம், செல்வாக்கைப் பலருக்கும் வெளிப்படுத்திக்கொள்ளத்தானே அந்தப் பிரபு பிள்ளையவர்களின் பிரசங்கத்தைத் தம் வீட்டில் ஏற்பாடு செய்தார்? தமிழ்ப்பற்றோ, தமிழ் அறிவோ உடையவர் அல்லவே! வ ந் த பொறாமைக்காரரின் பேச்சைக் கேட்டவுடன் பிரபுவின் முகமே வெளிறிப் போய்விட்டது. கவலையுற்ற நிலையில் இருந்தார்.

உங்கள் கவலை புரிகிறது. இன்றோடு உங்கள் வீட்டில் பிரசங்கம் செய்வதை நான் நிறுத்திக்கொன் கிறேன்’ எனப் பிள்ளையவர்களும் அந்தப் பிரபுவின் ஆதரவில் தாம் நடத்தி வந்த பிரசங்கத்தை நிறுத்திக் கொண்டார்; அவரது மனம், பிரபுவின் அழைப்பை ஏற்றதனால் மிகுந்த வேதனைக்கு உள்ளாயிற்று. .

இதுவாவது பரவாயில்லை; கும்பகோணம் அரசினர் கல்லூரித் தமிழாசிரியராகப் பிள்ளையவர்களின் மாணவர் தியாகராச செட்டியார் பணியில் சேர்ந்தார். அவரைப் பார்க்கப் பிள்ளையவர்களும் அடிக்கடி கும்பகோணம் போய்வருவார். -

அவ்வூரில் தாசில்தாராக இருந்த ஒரு கனவான் அப்போது தம் நண்பர்கள் சிலருடன் வந்து அத்தல் புராணத்தைத் தமிழில் பாடித் தரவேண்டுமென்று பிள்ளையவர்களைக் கேட்டுக்கொண்டார். பிள்ளையவரி களும் அக்கனவானின் வேண்டுகோளை ஏற்றார்கள்.

ஒவ்வொரு நாளும் தாம் இயற்றும் பாடல்களைக் கும்பேசுவரர் ஆலயத்தில் அரங்கேற்றியும் வந்தார். அந்த அரங்கேற்றக் கூட்டத்திற்குத் தலைமை தாங்கி வந்தவர் கனவானான கும்பகோணம் தாசில்தார்தாம். .

  • 1865-இல்,