பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 25套

திடீரென்று ஒரு நாள் அந்தக் களவான் அரங்கேற்றக் கூட்டத்திற்கு வரவில்லை. அவருக்காக நெடுநேரம் பிள்ளை காத்திருந்தார். யாரோ அவருக்கு உடம்பு சரியில்லை, வரமாட்டார் எனச் சொன்னார். பின்னர் அன்று அரங்கேற்ற வேண்டிய பகுதியைப் பிள்ளையவர்கள்

அரங்கேற்றினார். :

சில பெரிய மனிதரின் போக்குப்பற்றிப் பிள்ளையவர்கள்:

மறு நாள் தாசில் தாரின் உடல்நலம்பற்றி விசாரிக்கப் பிள்ளையவர்கள் அவரது வீட்டிற்குச் சென்றார். அப்போது அந்தக் கனவான், தம் வீட்டிற்கு வந்த பிள்ளையவர்களிடம் கொஞ்சமும் மரியாதை காட்டாமல், கோபமே வராத குணக்குன்றாகிய கவிஞர் சிகாமணியே எரிமலைபோலக் கொதித்தெழும்படி அவரைத் தாறு மாறாகப் பேசிவிட்டார்:

என்னை என்ன ஐயா நினைத்துக்கொண்டிருக் கிறீர்கள்? மற்றவர்களைப் போல லஞ்சம் வாங்குகிறவன் என நினைத்தீர்களா? என்னுடைய முயற்சியினால்தான் புராண அரங்கேற்றம் நடைபெற்று வருவதாகவும், நான் சன் அதிகாரத்தைப் ப ய ன் படுத் தி ப் பலரிடமும் நன்கொடைகள் வாங்கி உமக்கு நிறையச் சம்மானம் அளிக்க இருப்பதாகவும் ஊர் முழுவதும் சொல்வி வருகிறீராமே? பதவியிலிருந்து நான் ஒழுங்காக ஒய்வு பெற்றுப் பென்ஷன் வரங்க வேண்டுமா. வேண்டாமா? அதுபோல இனி யாரிடமும் சொல்லாதீர் உம் சங்காத்தமே நமக்கு இனி வேண்டாம்’ எனப் படபட வென்று, பணத்திற்காக அந்த அவதார புருஷர் ஏங்கி நின்றாரைப்போலப் பேசிவிட்டார். .

காரணம் ஒன்றுமில்லை; கடைத்தெருவெல்லாம் இதே பேச்சாக இருக்கிறதே! கலெக்டர் ஆபீசிலும் கசமுசா என்று உம்மைப்பற்றிப் பேச்சு அடிபடுகிறது. இந்த ஊரில் ஆளா இல்லை?- கலெக்டரிடமே உங்கள்