பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

*ց5 தாம் அறிந்த கி.வா.ஜ.

பேரில் யாராவது புகார் செய்திருக்கலாம்’ என அழுக்காறு கொண்ட ஒருவர் அந்தத் தாசில்தாரிடம் சொன்னவுடன், அவர் பீதி அடைந்துவிட்டார். அவரது சுயரூபம் வெளிப்பட்டது. -

‘இதனால் எல்லாந்தான், தமிழ்மொழி அறிவும். அதில் உள்ளார்ந்த அன்புமின்றி, எல்லோரும் விரும்பும் காரியத்தைத் தாமே செய்தால் தன்மதிப்பும் கவுரவமும் உயரும் எனக் கருதிச் செயல்படும் பிரபுக்கள், கனவான்கள் ஆகியோரின் அழைப்பை ஏற்றால் அவமானமே ஏற்படும், தம் செல்வச் செருக்கினால், பதவி இறுமாப்பினால் நம்மையும் அவர்களுக்குக் கீழ்ப்படிந்து நடக்க வேண்டு மென்று விரும்புவார்கள். பிறர் கூறுவதை அப்படியே நம்பும் இயல்புடையவர்களின் சகவாசம் கூடவே கூடாது, பரம ஏழையாயினும் தமிழ்மொழியிடம் அன்புடையவர்க ளிடத்துப் பெறும் ஆதரவுதான் சிறந்தது என்று பிள்ளையவர்கள் எங்களுக்கு அறிவுறுத்துவார்கள்’ என்றார் பூரீமத் ஐயர்.

சொற்பொழிவு ஆற்றுவதில் இயல்பாகவே மிக்க விருப்பமுடைய இவருக்கு இதைவிடச் சிறந்த அறிவுரை வேண்டுமா? -

- †: . . . ; 掌 3.

அகத்தீசர்மீது அன்பர் கி.வா.ஜ., பாடியபோது ஊக்கியது : வில்லிவாக்கத்தில் 21-3-30 - இல் நடைபெற்ற திருமுறை விழாவுக்கு ரீமத் ஐயர் இவரையும் அழைத்துச் சென்றார். -

“அகத்தியர் வில்வலன்-வாதாபியை இத்தலத்தில்தான் உண்டு புசித்தார். அகத்தியருக்கும் இங்கே பிம்பம் இருக்கிறது. நரசிங்கம்பேட்டையிலுள்ள சுவாமியின் கர்ப்பக்கிருகம் போல இங்கும் கர்ப்பக்கிருகம் வட்டமாக இருக்கும். இ த ைன க் க ஜ ப் பி ருஷ் - விமானம்"