பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

257 தாம் அறிந்த கி.வா.ஜ.

எழுதினவர்கள் அல்லது பதிப்பித்தவர்கள் செய்த பிழை ஒன்று இருக்கும். . * ஒரு ராகத்தை ஒருவன் பாடிக்கொண்டே வரும் போது, சங்கீத வித்துவான்கள் எங்கேயாவது சிறிது அபஸ்வரம் நேர்ந்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள் இல்லையா? அதைப்போல ஐயரவர்களது காது கலப்படத் தமிழைப் பிரித்து அறிவதில் மிகவும் துண்ணுணர்வை உடையது. சங்ககால வாக்கு இது: பிற்காலத்தது இது” என எடுத்தவுடனே சொல்லிவிடுவார்.

‘குறிப்புரை எழுதும்போது அவர்களே எழுது கிறார்கள். இல்லாவிட்டால் எங்கள் யாரிடமாவது சொல்லி எழுதுவிப்பார்கள்.

ஐயரவர்களின் விட்டுக்கு நீங்கள் வந்து பார்க்க வேண்டும்: சுந் த ரே ைச ய ர், வி.மு.சு., நாயகர், கோதண்டராமையர், நான் இப்படி நான்கைந்து பேர்கள் எப்போதும் அவரது வீட்டிற்குச் சென்று வருகிறோம்.

‘தபால் பிரிப்பது, ஐயரவர்கள் சொல்லும் கடிதங் களை எழுதுவது, அச்சுக்கு அனுப்பப் பிரதி செய்வது. *ப்ரூஃப்” வரும்போது ஒப்பிட்டுப் பார்ப்பது, பிழை திருத்துவது என்பதாக எங்கள் ஒவ்வொருவருக்கும் ஏதாவது பணி இங்கே இருந்துகொண்டே இருக்கின்றது. இடையில் நாங்கள் ஆசிரியரிடம் பாடமும் கேட்கிறோம். - ‘தரையில் ஒரு கணக்குப்பிள்ளை மேஜைக்கருகில் அந்தத் தவமுனிவர் உட்கார்ந்திருப்பார். அந்தக் காலத்துக் குருகுலவாசம் செய்யும் மாணவர்களைப் போல நாங்கள் மேல்வேஷ்டியை இடுப்பில் கட்டிக்கொண்டு அவர் முன் உட்கார்ந்திருப்போம்.

“நூலிலுள்ள கருத்துக்கும், சொல்லமைப்புக்கும் ஒத்த பகுதிகள் இன்ன இன்ன நூலில் உள்ளனவென்று காட்டுதல் அவரது தனிப்பெருமை. சீவக சிந்தாமணியில் இன்ன இடத்தில் பார்: இது விளங்கும் என்பார். இப்படியே பல ஒப்புமைப் பகுதிகள் குறித்துக்கொள்ளப்படும்.