பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

259 - நாம் அறிந்த கி.வா.ஜ.

  • ஐயரவர்கள் தமிழாராய்ச்சிப் பணியில் ஈடுபட்டிருக்கும். போது இடையில் எவரேனும் வந்துவிடுவார்கள். அவர் களிடையே பேச்சு, பழைய வரலாறுகள் சம்பந்தமாக இருந்துவிட்டால் உண்டாகும் ஊக்கமே வேறு. நகைச் சுவை ததும்பப் பேசுவார். அவர்கள் போன பிறகு, வருந்துவார். * இன்றைக்கு வேலை குறைந்து விட்டது’ என்பார்.
  • நீங்கள் எவ்வளவோ காரியங்கள் செய்திருக். கிறீர்கள் என்று யாராவது சொன்னால், என்ன செய்துவிட்டேன்? இ ன் னு ம் .ெ சய் ய வேண்டியது எவ்வளவோ பாக்கியிருக்கிறதே என்ற இரக்கக் குறிப் போடு விடை கூறுவார்.”

வருகிறவர் எவரேனும் பிறரைப்பற்றிக் குறை. சொல்லத் தொடங்கினால் ஐயரவர்கள் மறைமுகமாகப் பேச்சை வேறு விஷயத்திற்கு மாற்றிவிடுவார். இப்படி எல்லாம் ஏன் பிறரை அவதூறு கூறுகிறீர்கள்?’ என நேரிடையாக வந்தவர் துணுக்குற நடந்துகொள்ள மாட்டார். -

இவ ற்றை ெயல் லாங் கூட த் தம் ஆசிரியப். பிரானிடமிருந்து கூர்ந்து கவனித்துத் தம் குணமாகவும் கொள்ளத் தொடங்கினார், அன்பர் கி.வா.ஜ.

இவர் தம் நண்பர் செல்லமையருக்கு எழுதிய கடிதம் ஒன்றைப் பாருங்கள்: R

  • ஒவ்வொரு நாளும் புதுப்புதுச் செயல்கள், பொருள்கள் தோன்றி யாவருக்கும் விம்மிதம் அளித்து வருகின்றன. அப்படி இருக்க, இந்தக் காலத்திற்குத் தேவையற்ற, பயனற்ற, வழக்கொழிந்துபோன நூல் களையும் உரைகளையும் பூரீமத் ஐயர் பதிப்பித்து வருகிறார். இதனால் நாட்டுக்கு என்ன பயன்?’ எனச் சிலர் மறைமுகமாகக் கிண்டலும், கேலியும் பேசி எழுது கிறார்கள். நமக்குக்கூட வழக்கொழிந்துபோன தமிழ் நூல் களுக்கு உயிர் கொடுத்துப் பழம்புலவர்களைத் தமிழ்.