பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/262

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

26 I நாம் அறிந்த கி.வா.ஜ.

ஆசானின் துயரை ஆற்றிய கிகழ்ச்சி : -

திருப்பனந்தாள் மடத்தின் அதிபராக இருந்த பூரீலபூர் காசிவாசி சொக்கலிங்கத் தம்பிரான், ஐயரவர்களிடம் மிக்க. மதிப்பும் அன்பும் உடையவர்; தமிழ் வளர்ச்சிப் பணி களில் அவருக்குப் பேராதரவாக இருந்தவர். 1980-ஆம் ஆண்டு மார்ச் 23-ஆம் நாள் அவர் பரிபூரணம் அடைந்த செய்தி கேட்டு ஐயரவர்கள் அயர்ந்து போய்விட்டார்.

அண்ணா பயந்தே போனார்; ஒரு நிமிஷம் யாரும் பேசவில்லை; இன்று மேற்கொண்டு எந்த வேலையும் செய்ய வேண்டாம். தகப்பனார் கொஞ்சம் ஒய்வு எடுக் கட்டும். நீங்கள் எல்லோரும் வீட்டுக்குப் போங்கள்’ என இவர்களிடம் சொன்னார்.

எல்லோரும் எழுந்திருந்தார்கள். இவரும் அந்த இடத்திலிருந்து எழுந்து அப்பால் சென்றார். ஆயினும் ஐயரவர்களது துக்கத்தைப் போக்க இவருக்கு ஒரு வழி தோன்றியது. துன்பங்கள், துயரங்கள், அபவாதங்கள் அனைத்தையுமே தாங்கிக்கொண்டு ஐயரவர்கள் வாழ்ந்து கொண்டிருப்பது தமிழால் அன்றோ?

முன்பு ஐயரவர்களால் அறிமுகம் செய்விக்கப்பட்ட போது தமக்கு உதவியவர் வள்ளல் பூரீலபூரீ காசி வாசித் தம்பிரான் அல்லவா? -

  • புண்ணாட்டும் புலவர்கள்தம் பசிதவிர்க்கும் வண்மையொடும் பனசை மேவி எண்ணாட்டும் பல அறங்கள் மிகப்புரிந்து

புகழுடம்பை இங்கேகாட்டி - விண்ணாட்டிற்(கு) ஏகினையே கின(து)இயற்சீர்

விரவுதளை மேவு பாடற் *குண்ணாட்டப் படுவதொன்றோ சொக்கலிங்க

முனிவரன் என்றோது மேலோய்’ என்ற இரங்கப் பாடல் ஒன்றினை உடனே எழுதினார்.

  • நினது சீர், மேவு பாடற்குள் நாட்டப்படுவது

ஒன்றோ?