பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/263

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 262

ஐயரவர்களிடம் சென்று எதுவும் பேசாமல், அந்தத் தாளைமட்டும் நீட்டினார். அவர் அதை வாங்கி முதலில் அரைமனத்தோடு மேலெழுந்தவாரியாகப் பார்த்தார். சட்டென்று இவரை நிமிர்ந்து பார்த்துவிட்டு மறுபடியும் ஒரு முறை படித்தார். இவரைத் தம் அருகில் உட்காரச் சொல்லி, சைகை காட்டிக்கொண்டே, விண்ணாட்டிற் கேகினையே’ என்பதை வாய்விட்டுப் படித்தபோது அவரது தொண்டையை அடைத்துக்கொண்டிருந்த துயரம் இறங்கிவிட்டது; சோக ரசத்தில் ஆழ்ந்து போனார்கள். கண்களிலிருந்து முத்து முத்தாக நீர் உதிர்ந்தது. அவரது முகத்தில் பழைய களை வந்தது. இப்படிச் சமய சந்தர்ப் பத்திற்கு ஏற்றவாறு நடந்துகொள்ளக் கூடிய ஆற்றல் இவருக்கு இருந்தது. -- - -.

X。 - X х ஆராய்ச்சிக்கு நேர்ந்த தடை :

இவர் வழக்கம் போல் அன்று தியாகராஜ விலாச த் திற்குக் காலையில் போனார். ஐயரவர்கள், கூடத்தில் படுத்திருந்தார். எப்போதும் மேல்மாடியில் இருந்து தமிழ்த் தொண்டு புரிபவர் அவர்; கீழே கூடத்தில் படுத்திருப்பது அவருக்கு வழக்கமில்லையாதலால், இவர் உள்ளே புகுந்து அவரைக் கண்டவுடன் சற்றுத் திடுக்கிட்டார். அருகில் சென்று, ஏன் இப்படி?’ என்று கேட்டார். -

கராத்திரி கீழே விழுந்துவிட்டேன்’ என்றார் ஆசான். அப்போது அண்ணா உள்ளேயிருந்து அங்கு வந்தார். சராத்திரி தொப்பென்று ஏதோ சத்தம் கேட்டது. நான் விழித்து எழுந்து வந்து பார்த்தேன். மாடிப்படியின்கீழ் இவர் விழுந்துவிட்டார். ஒருவரையும் எழுப்பாமல் எழுந்திருக்கப் பார்த்தும் முடியவில்லை. நான் எடுத்துக் கூடத்திலேயே படுக்கச் செய்தேன்’ என்றார். - முதலில் சுருக்காக இருக்குமென்று எண்ணெய் தடவி நீவினார்கள். பிறகு ஏதேதோ மருந்து தடவினார்கள். வலி வாங்கவில்லை. அடிபட்ட காலின் வீக்கமும் வரவர