பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/264

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

.2Ꮾ 8 - நாம் அறிந்த கி.வா.ஜ.

அதிகமாயிற்று. இவர் ஐயரவர்களின் அருகிலேயே இரவு பகலாக இருந்து வந்தார். , .” 本 永 :

பழைய நினைவு :

ஒரு நாள் இரவு இவர் சற்றுக் கண்ணயர்ந்து இருப்பார். யாரோ ஒரு பெரியவர், கிருத்திகை விரதத்தை விட்டு விட்டாயே!’ எனச் சொல்லி மறைந்தாற்போல ஒரு கனவு கண்டார். இவரது உடம்பெல்லாம் நடுங்கிற்று.

முன்பு ஒரு சமயம் ஐயரவர்களுடன் பெங்களுருக்கு இவர் சென்றிருந்தபோது நடந்த விருந்துபசாரம்பற்றிய நினைவு வந்தது இவருக்கு. அன்று கிருத்திகை, பல கால மாகக் கிருத்திகைதோறும் இவர் விரதம் இருந்து வருவது வழக்கம். அதனால் இவர் எதுவும் சாப்பிடவில்லை. அதைக் கண்ட ஐயரவர்கள், எவ்வளவு சிரமப்பட்டு நமக் காக விருந்து தயாரித்திருக்கிறார்கள்! நீர் சாப்பிட வர வில்லை யென்றால் நான்மட்டும் எப்படிச் சாப்பிடுவேன்? எனக்கும் சாப்பாடே பிடிக்கவில்லை’ என்று சிறு குழந்தைபோல் சிணுங்கிக்கொண்டார். -

ஆசானது மனம் துன்பம் அடைவதை இவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை.

அவரது மகிழ்ச்சியைக் காட்டிலும் விரதம் என்ன வேண்டிக் கிடக்கிறது? என எண்ணி ரீமத் ஐயருடன் விருந்து சாப்பிட்டார். அப்புறம் கிருத்திகை விரதத்தில் அவ்வளவு உறுதி காட்டவில்லை.

இப்போது ஐயரவர்கள் இவ்வாறிருந்த நிலையில் முற்கூறிய கனவைக் கண்டதனால் இவர் சற்று மனம் குழம்பிவிட்டார். இதுபற்றி த் த யங் கி ய படி யே ஆசானிடம் தெரிவித்தார். - .

உடனே ஐயரவர்கள், நீர் திரும்பவும் கிருத்திகை விரதத்தை மேற்கொண்டுவிட வேண்டும். அதைக் கைவிடும்படி உம்மை தான் வற்புறுத்தி இருக்கக் கூடாது'