பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/265

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் w 264

என்று வருத்ததுடன் கூறினார். அவரது கள்ளங்கபடமற்ற பேச்சும், இவரது வார்த்தையில் அவர் கொண்ட நம்பிக்கையும் இவரை உருக்கிவிட்டன. -

மறு நாள் கிருத்திகை. நீராடியபின் இவர் நெற்றி நிறைய விபூதியைத் தரித்துக்கொண்டார். ஆசிரியப் பிரானுக்கு உடம்பு குணமாகவேண்டுமென்று முருகனை வேண்டிக்கொண்டு விரதம் இருந்தார். -

ஒரு நாள் ரீமத் ஐயருக்கு நினைவே இல்லை; ஜூரம் அவ்வளவு கடுமையாக இருந்தது. காலில் உள்ள வீக்கமே ஜுரத்துக்கும், அதனால் உண்டாகும் ஞாபகப் பிசகு முதலியவற்றுக்கும் காரணம் எனத் தெரிய வந்தது.

தம் சுயநினைவு வரும்போதெல்லாம் ஐயரவர்கள் அலங்கமலங்க விழிப்பார். இவரைத் தம் அருகில் வருமாறு சைகை காட்டி, பிள்ளையவர்களின் சரித்திரத்தை எழுத வேண்டும்’ என சனசுவரத்துடன் சொன்னார்.

மிகுந்த கவலைக்கிடமான இந்த நேரத்திலா எழுத முடியும்? ஏதோ ஆவலாய் அப்படிச் சொல்கிறார்கள். நீர் சும்மா இரும்’ என்று அண்ணா இவரைத் தடுத்து விட்டார்.

கால்வீக்கம் வடியாமல் இருந்தது கண்டு மருத்துவ மேதை டாக்டர் ரங்காசாரியாரை அழைத்து வந்து காட்டினார்கள். அவர் ஐயரவர்களிடம் அன்பு உடையவர்: அவரது கை பட்டாலே நோய் தீரும் என்பார்கள்.

இதுபற்றிக் கவலைப்பட வேண்டாம். ஆபரேஷன் செய்துவிடலாம். உங்கள் வீட்டிலேயே அதை நடத்து கிறேன்’ என்று அவர் அபயம் அளித்தார். *

ஆபரேஷனுக்கு நாள் குறிப்பிட்டாயிற்று, பிற்பகல் இரண்டு மணி அளவுக்கு அது நடைபெற இருந்தது.

டாக்டர் வந்தார். ஐயரவர்கள் அவருக்கு அஞ்சலி செய்தார். இந்தச் சரீரம் இன்னும் கொஞ்ச காலத்துக்கு இருத்தால், அரையும் குறையுமாக இருக்கிற காரியங்களை