பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/266

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

365 நாம் அறிந்த கி.வா.ஜ.

நிறைவேற்ற முடியும்’ எனச் சொல்லும்போது பூரீமத் ஐயரின் கண்கள் கலங்கின.

தாம் இறப்பதற்குள் தம் ஆசிரியப்பிரானான பிள்ளை யவர்களது சரித்திரத்தை எழுதி முடித்துவிடவேண்டு மென்ற வேகம் அவருக்கு இருந்தது.

இது என்ன சின்ன ஆபரேஷன்தான்! பயமே வேண்டாம்! நீங்கள் இன்னும் பல பெரிய காரியங்களைச் செய்யப் போகிறீர்கள் என்று டாக்டர் புன்னகையுடன் சொல்லிக்கொண்டே தம் காரியத்தில் இறங்கினார்.

ஐந்தே நிமிஷத்தில் தம் வேலையை முடித்துக் கட்டுக் கட்டிவிட்டார் டாக்டர் ரங்காசாரியார்.

அந்த மேதாவி மகான், மனிதப் பிறவி அல்ல; தேவ புருஷன்!” என்றே எண்ணி யாவரும் வியந்தார்கள்.

மெள்ள மயக்கம் தெளிந்து பூரீமத் ஐயர் கண்ணை விழித்தார். என்ன இது, மருந்து நெடி வீசுகிறதே! ஆபரேஷன் செய்யவில்லையா?” என்றார்.

ஆபரேஷன் ஆகிவிட்டது’ என்று டாக்டர் சொன்னதை ரீமத் ஐயர் நம்பவில்லை; அதற் குள்ளேயா? எனக்கு ஒன்றும் தெரியவில்லையே! : என்றார்.

இன்னும் ஒரு வாரம் ஜாக்கிரதையாகப் படுக்கை யிலேயே இருங்கள். எந்த வேலையும் செய்யவேண்டாம். சரியாகப் போய்விடும்’ என்று சொல்லி டாக்டர் ரங்காசாரியார் விடை பெற்றுக்கொண்டு போனார். ஐயரவர்களின் குரலைக் கேட்டபின்புதான் இவருக்கும் உயிரே வந்தது. அவர் திரும்ப அயர்ந்து உறங்குவதைக் கண்டு, முருகா, உனது அருட் செயலை நான் என்றும் மறக்கவே மாட்டேன்’ எனக் கண்களில் நீர் பொழியக் காந்தமலையானை நினைந்து விம்மினார்.

ஐயரவர்களின் உடல்நிலை சீராகி வந்தது. அண்ணா தாம் எடுத்திருந்த வீவு முடிந்தவுடன் தம் அலுவலகம் போகத் தொடங்கினார். போகும்போது, இன்னது நா.-17 - -