பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/267

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் . . . . . 266

இன்னது இன்னபடி செய்ய வேண்டும்’ என இவரிடம் சொல்லிவிட்டுப் போய்விடுவார். . .

ஐ ய ர வர் களுக் குத் தமிழ்ப் பா ட ல் காதில் விழாவிட்டால் உ யி ரே போய்விட்டது போ ல் இருக்கும். எனவே, தம்முடைய குமாரர் அலுவலகம் போனவுடன் இவரை விட்டுத் தேவாரம், திருவாசகத்தைப் படிக்கச் சொல்வார். ‘. . -

படுக்கையில் இருந்துகொண்டே ஒரு நாள் இவரிடம் பிள்ளையவர்களின் சரிதக் குறிப்பை எடுத்து வாரும்’ என்று சொன்னார். - . -

டோக்டர் எந்த வேலையும் செய்ய வேண்டாம் எனச் சொல்லியிருக்கிறாரே “ என இவர் தயங்கினார்.

அப்போது ஐயரவர்கள் கவலையுடன், நான் திடீரென்று போய்விட்டால் என் ஆசிரியப்பிரானின் சரித்திரம் முற்றுப் பெறாமல் நின்றுவிடுமே; ஜூரம் வந்தாலும் பாதகமில்லை; பிள்ளையவர்களின் சரிதத்தை முடித்துவிட்டேன் என்ற நினைவோடு இறந்து போனால் சாந்தியோடு இறப்பேன்’ என்றார். -

ஐயரவர்களுடைய வார்த்தைகள் உணர்ச்சி கனலில் தெறித்துவிழும் சுடர்ப்பொறிகளாக வந்தன. அவர், தம் குருவிடம் கொண்டுள்ள பக்தி இவருடைய கண்களில் நீரை வருவித்தது. முருகன் காப்பாற்றுவான்’ என்ற நம்பிக்கை யோடு பிள்ளையவர்களின் சரித்திரக் குறிப்புகளை எடுத்து வந்தார். அண்ணா என்ன சொல்வாரோ?’ என்கிற பயம் போய்விட்டது.

கவிஞர் பெ ரு மா னா ன பிள்ளையவர்கள் தேக அசெளககியம் அடைந்திருந்த பகுதிவரை அவரது சரித்திரம் உருவாகியிருந்தது. அன்றும் மறு நாளும் தொடர்ந்து இப்படி எழுதினார்கள்: அதுவும்: டாக்டர் வராத பிற்பகலில் அண்ணாவும் அலுவலகம் போன பிறகு யாரும் கண்டுகொள்ளாத நேரத்தில் பிள்ளையவர்களின்