பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/268

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

367 தாம் அறிந்த கி.வா.ஜ.

சரித்திர கைங்கரியம் படுவேகமாக, திருட்டுத்தனமாக நடந்து வந்தது. -

புலவர் பெருமான் சில கடிதங்களை எழுதச் செய் கிறார். அக்னிலிங்க சாஸ்திரிகள் என்ற வடமொழி வித்துவான், சங்கராசார்யர் செய்த சிவானந்தலஹரியி லுள்ள ஸ்தா மோஹாடவ்யாம் (எப்போதும் மோகம் என்னும் அடவியில்) என்ற சுலோகத்தைச் சொல்லிப் பொருளையும் சொல்கிறார். கவிஞர் பிரான் அதை அப்பொழுதே செய்யுளாக மொழிபெயர்க்கிறார்....’

இப்படி வரும் நிகழ்ச்சிகளை ஐயரவர்கள் சொல்லச் சொல்ல இவர் எழுதி வந்தார்:

பிள்ளையவர்களது வாழ்க்கையின் இறுதி நெருங்கிக் கொண்டிருக்கிறது. பிரக்ஞை தவறுகிறது. மறுபடியும் சிறிது தெளிவு ஏற்படுகிறது. அப்போது அவர் திருவா” என்று மாத்திரம் குறிப்பிக்கிறார். அக்குறிப்பை அறிந்து நான் திருவாசகத்தை எடுத்து வந்து அடைக்கலப் பத்தை வாசித்தேன். - w
பிள்ளையவர்கள் கண்ணை மூடிக்கொண்டே கேட்டு வந்தார். அப்போது அவருக்கு உடலில் ஒர் அசைவு உண்டாயிற்று. உடனே நாங்கள் சமீபத்தில் சென்ற பொழுது வலக் கண்ணைத் திறந்தார். அதுதான் யூரீ நடராஜ மூர்த்தியினுடைய குஞ்சித சரணத்தை அடைந்த...”

இப்படிச் சொல்லிக்கொண்டே வந்த பூரீமத் ஐயருக்கு மேலே பேச முடியவில்லை. அப்பொழுது அவர் தியாக ராஜ விலாச’த்தில் இருக்கவில்லை. திருவாவடுதுறையில் பிள்ளையவர்களது நல்லுடலத்திற்கு அருகில் இருந்தார்: தாரை தாரையாகக் கண்ணிர் பெருகியது.

‘வடமொழி வித்துவான்களாகிய அந்தணர்களின் கூட்டத்திலிருந்து தமிழ்க் காளிதாசா. தமிழ்க் காளிதாசா என்ற சப்தமும், தமிழ் வித்துவான்கள் வாக்கிலிருந்தும் அயலூரிலிருந்து வந்திருந்த பிள்ளையவர்களின் மாணாக்