பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/269

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 26 &

கர்களின் கூட்டத்திலிருந்தும், தமிழ்க் கடலே, எங்களுக்கு அரிய விஷயங்களை இனி யார் அன்புடன் சொல்வார்கள்? யாரிடத்தில் நாங்க ள் செல்லுவோம்? எங்களைக் கவனிப்பார் யார்?’ என்ற ஒலியும், வேறொரு சாராரிட மிருந்து, குணக்கடலே! சாந்த சிரோமணி” என்ற ஒலியும் உண்டாயின. உடன் சென்ற அபிஷிக்தர்கள் திருவாசகம்’ சொல்லிக்கொண்டு போகையில், இனிமேல் திருவாசகத் திற்கு மிகத் தெளிவாகவும், அழகாகவும் யார் பொருள் சொல்லப் போகிறார்கள்?’ என்று என் தந்தையார் முதலிய பலர் சொல்லி மனம் உருகினார்கள்.’

இப்படி ஐயரவர்கள் இந்தப் பகுதியைச் சொல்லி வருகையில் இவரும் விசிக்கவே ஆரம்பித்துவிட்ட்ார்.

அந்தப் பகுதி இவர் மையில் தோய்த்து எழுதியது அன்று கண்ணிரில் தோய்த்து எழுதியதாகும்.

இவர் அந்த அத்தியாயத்தை எழுதி முடித்தவுடன் ஐயரவர்கள் சீராக வெளியிட்ட மூச்சு, அவருக்கு ஏற்பட்ட மனநிறைவை உணர்த்தியது. நோவு நீங்கிய களையை இவர் அவரது முகத்தில் கண்டு மகிழ்ந்தார். -

X X X

ஆசானின் பலதரமான புகழ்:

ஐயரவர்களின் உடம்பு படிப்படியாக குணமாகி வந்தது. என்றாலும், வெளியிடங்களுக்குப் போக முடிய வில்லை. 1931-ஆம் ஆண்டு ஜனவரியில் கும்பகோணம் கல்லூரியின் வைர விழாக் கொண்டாட்டமும் திருவாவடு துறை மடத்துக் குருபூஜையும் வந்தன. - -

ஐயரவர்கள் இ வ. ைர .ே ய கும்பகோணத்துக்கும் திருவவாடுதுறைக்கும் போகச் சொன்னார்.

இவர் முதலில் கும்பகோணம் சென்றார். கல்லூரி விழாக்குழுவினருக்கு, முன்னதாகவே தம் உடல்நிலை குறித்துக் கடிதம் எழுதியதோடு, இவரைப் பற்றியும் குறிப்பிட்டு இவரை அனுப்பி வைப்பதாக எழுதி