பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/270

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

艺69 - நாம் அறித்த கி.வா.ஜ.

யிருந்தார். அவர்களும் இவரை மிக்க அன்புடன் நடத்தினார்கள். -

ஐயரவர்களின் படத்தை உயர் நீதிமன்ற நீதிபதி கே. சுந்தரம் செட்டியார் அந்த விழாவில் திறந்து வைத்தார். -

பூரீமத் ஐயரது தமிழ்த் தொண்டினைப்பற்றி அதே கல்லூரியில் தமிழ்ப் பண் டி த ரா. க ப் பணியாற்றிய எம். வி. ராமாநுஜாசாரியார் பேசினார்.

ஐயரவர்களின் தகப்பனார் பெயர் தமிழ் நாட்டின் எல்லை வேங்கடத்தைத் தழுவி, அகத்தியனாருக்குத் தமிழ் உபதேசித்த சுப்பிரமணியனின் பெயரோடு இணைந்த வேங்கடசுப்பையர்; தாயாரின் பெயர் கல்விக்கு அதிதேவதை சரஸ்வதி; இவர் பெயர் சாமிநாதன்: இனிய குணமுடைய இவருக்கு வாய்த்த துணைவியார் பெயர் மதுராம்பாள்; இவரது வீட்டில் வழிபடும் தெய்வம் மீனாட்சிசுந்தரேசுவரர்!. மதுரைத் தமிழ்ச் சங்கப் புலவர்களோடு தாமும் ஒரு புலவராக இருந்து தமிழாராய்ந்த மீனாட்சிசுந்தரப் பெயருடைய வரே ஐயரவர்களின் ஆசிரியரும் ஆவார். இவர் செய்து வரும் உத்தமமான பணிக்கேற்ப இவர் பிறந்ததும் உத்தமதானபுரம், ந ம் ைம ெய ல் லா ம் ஆன ந் த வெள்ளத்தில் மிதக்கச் செய்து கொண் டி ரு க் கு ம் இவர் தோ ன் றி யது ஆ ன ந் த. வ ரு ஷ ம்’ என இப்படி வரிசையாக எடுத்துக் காட்டிய பொருத்தங்கள் அவையில் இருந்தவர்கள் அனைவரையும் மகிழ்ச்சிக் கடலில் மிதக்கச் செய்தன.

அன்பர் கி.வா.ஜ.வும் அப்போது, மாணாக்கர்களை நோக்க ஐயரவர்கள் ஒரு பேராசிரியர் என்றாலும், இந்த வயதிலும் நூலாராய்ச்சியில் ஊக்கம் குன்றாமல் படிப்ப திலும் தெரியாதவற்றை மற்றவர்களிடமிருந்து கேட்டுத் தெரிந்துகொள்வதிலும் அவர் இன்றும் ஒரு சிறந்த மாணாக்கராகவே இருந்து வருகிறார்’ என்பதைச் சில