பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27. I . நாம் அறிந்த கி.வா.ஜ.

உறுதுணையாக இருக்க வேண்டும். பொருட்செலவைப் Hற்றிக் கவலைப்பட வேண்டாம். நாம் உதவி செய்வோம்’ என மிக்க பெருமிதத்தோடு தெரிவித்தார் சுவாமிகள். * கு. “கொட்டையூர்ச் சிவக்கொழுந்து தேசிகரின் பிரபந்தத்தைக் கொஞ்சம் பார்க்கலாமா? என இவரிடம் - கேட்டார். .

இவருக்கு மிகவும் மகிழ்ச்சி. அவருக்குப் பாடம் சொல்வாரைப் போல, இவர் அவருடன் சேர்ந்து அந்த துாலைப் படித்தார், ஆசான் தமக்குச் சொன்ன நுட்பங்கள் அனைத்தையும், மறக்காமல் சுவாமிகளுக்கு இவர் எடுத்து விளக்கினார். .

அப்போதுதான் தம்பிரான் அவர்கள், சிவக்கொழுந்து தேசிகரின் பிரபந்தங்களை அவ்வாண்டு பதிப்பிக்க வேண்டும் எனத் தாம் விரும்புவதாக ஐயரவர்களிடம் தெரிவிக்கச் சொன்னார். . -

இத்தகைய ஆசானிடம் பயிலக் கொடுத்து வைத்தது பற்றி மிக மகிழ்ச்சி அடைந்தார் அன்பர் கி.வா.ஜ.

காட்குறிப்பு எழுதும் பழக்கம்

இவருடைய கடந்தகால நிகழ்ச்சிகள், திகழ்காலக் கடமைகள், எதிர்காலத் திட்டங்கள் ஆகியவற்றைத் தெளிவாக அறிவதற்கு இவருடைய நாட்குறிப்பு எழுதும் பழக்கந்தான் காரணம். r -

எப்படியும் வாழலாம்” எ ன் கி ற கொள்கை யுடையவர்களின் வாழ்க்கை, பாய்மரம் இல்லாத படகு போல் பலநேரம் சிதறுண்டு போகக் காண்கிறோம். இவரோ, இப்படித்தான் வாழவேண்டும்” என்கிற உயரிய லட்சியத்தோடு தம்மை இணைத்துக்கொண்டுவிட்டார். அதனால் இவரது வாழ்வு சீராக முன்னேறி வந்தது. திரு.வி.க-விடம் ஈடுபாடு

“பரத்துக்கும் உயிருக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவதே சமயம். இத்தொடர்பை உணர்ந்து