பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/273

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 272

ந.ட ப் ப வ ன து வாழ் க் ைக க் கு ம் ம ற் ற வ ன து வாழ்க்கைக்கும் வேற்றுமை உண்டு. முன்னவனின் வாழ்க்கை உலகுக்கு நலன் செய்யும்; பின்னவனின் வாழ்க்கை கேடு செய்யும்’ எ ன் ற - திரு.வி.க.அவர்களின் நல்லுரை இவரைப் பெரிதும் ஈர்த்தது. -

பரம்பொருளாகிய மு. ரு க க் கடவுணின் நினைவு அகலாமல் ஆசானின் திருவடிதாசனாக இருந்தபடி தோற்று வந்த நோன்பு இவரது ஆற்றலையும், சக்தியையும் உலகுக்குப் பயன்படத் தக்க அளவு பெருக்கியது: நல்ல பல தமிழ்ப் பெரியோர்களின் அன்பையும் தொடர்பையும் கூட்டி வைத்தது.

1931 - செப்டம்பரில் ஐயரவர்கள் இவரைத் திருவிடை மருதுாருக்கும் திருப்பனந்தாளுக்கும் அனுப்பி வைத்தார். அங்கிருந்து மோகனூர் சென்று தம் தாய்தந்தையர்களை இவர் பார்த்துவிட்டுச் சென்னை வருவதாகச் சொல்லி ஐயரவர்களிடம் அநுமதி பெற்றுக்கொண்டு சென்றார்.

மோகனூர் சென்று காவிரியையும், காந்தமலை யானையும் பார்த்துவிட்டால் உடனே சென்னை திரும்ப மன்ம் வ ரு மா? நவராத்திரி வரை மோகனூரில் தங்கிவிட்டார். -

அப்போது ஐயரவர்களே இவருக்குப் பல கடிதங்கள் எழுதியுள்ளார்; அவற்றுள் ஒன்றில், எனக்கு எழுதிய கடிதத்தின் தலைப்பில் வரம்பு கடந்த முகமன் எழுதப் பெற்றிருந்தது. இனி அங்ஙனம் எழுத வேண்டாம். நான் பெரிய மடாதிபதியல்லன்’ எ ன ச் சற்றுக் கடிந்து கொண்டுமிருக்கிறார்.

அடுத்த கடிதத்திலேயே, இதுகாறும் பதில் வராமை யால் மெத்தக் கவலை அடைந்துகொண்டிருக்கிறேன் - முன் கடிதத்தின் தலைப்பில் திருவடித் தாமரைகளில்” என நீர் பாராட்டி எழுதியிருந்ததை எண்ணித்தான்...” எனச் சமாதானமும் கூறியிருக்கிறார், ஐயரவர்கள்.