பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/274

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

273 - நாம் அறிந்த கி.வா.இ.

. “உமக்குச் செளகரியமில்லையாயின் தகப்பனாரவர் களைக் கொண்டாகிலும் கடிதம் எழுதக் கூடாதா?’ என வேண்டியிருக்கிறார், ஐயரவர்கள்.

“யாருடைய கண்ணாவது பட்டிருக்க வேண்டுமென்று எண்ணுகிறேன். இரண்டாம்பாலாறிய மு தி ய வ ர் க ள் யாரேனும் இருந்தால் உம்மைத் திருஷ்டி சுற்றிப் போடச் சொல்ல வேண்டும்” என இவருக்கு உடம்பு சரியில்லை யென அறியும்போது மனம் துடித்திருக்கிறார்.

யாரோ ஒரு பெரியவர் கிருத்திகை விரதத்தை விட்டு விட்டாயே எனச் சொல்லி மறைந்தாற்போல தாம் ஒரு கனவு கண்டதாக இ வ. ர் ஐயரவர்களிடம் முன்பு சொன்னதை நினைவு கூர்ந்து, “சென்ற கார்த்திகைக்கு உபவாசமிருந்தீரா?’ என்று ஐயரவர்கள் கேட்கிறார். கடிதத்தில்.

உமக்குக் கடிதம் எழுதிக்கொண்டிருந்தபோது திருச்செந்தூர் ஆண்டவன் பிரசாதம் வந்தது. எழுதுகிற வரும் அவனது திருநாமம் உடையவரே என்பதும் விளங்கும்’ என முருகனை நினைவுபடுத்துகிறார்.

“நான் தனியே இருக்கிறேன் என்று எண்ண வேண்டாம். ஒன்றும் செய்ய முடியவில்லையே என மனக் கவலை துணையாக இருக்கிறது; சிறிதும் விலகவில்லை! சரணாகதி பண்ணியவர்களை விலக்கக் கூடாதென்று ஊழ்வினையாகிய ந ண் பன் அறிவுறுத்துகிறான்” என்பதாக ஹாஸ்யம் இழையோடத் தம் செயலற்ற நிலையைப் புலப்படுத்தியிருக்கிறார், ஐயரவர்கள்.

காரியார்த்தமாகப் பலர் வந்து வந்து போகிறார்கள். படிப்பைப்பற்றிய பிரஸ்தாபமேயில்லை.

“எளிய நடையுள்ள திருவிளையாடலை முதலிலிருந்து பாராயணம் செய்து வருகிறேன்.

நீர் வசனநடையாலான புத்தகங்களைப் படித்துப் பூர்த்தி செய்தல் உத்தமமே.