பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

275 - நாம் அறிந்த கி.வா.ஜ.

செய்யும்படி சிரஞ்சீவி-க்குத் தலைவர்கள் எழுதுவித்து விட்டார்கள். அதைப்பற்றிய முயற்சி நடந்துவருகிறது. அடுத்த மாத முதலில்தான் நடக்குமென்று எண்ணு. கிறேன். சி. கணபதி ஐயரின் நண்பர் ஈரோடு திருவேங் கடாசாரியார் எ ன் ப வ ர் அ. க ந ா னு று ஏட்டுப் பிரதியொன்று (200 பாடல் வரையில் உள்ளது.

90 ப ா ட ல் க ளு க் கு உ ைர யு ள் ள து) அனுப்பிக்

கடிதமும் எழுதியிருந்தார். மேற்படி பிரதி மிக நல்ல பிரதி. பெற்றுக்கொண்டு கடிதமும் எழுதிவிட்டேன். மேற்படி

பிரதி இருந்த இடத்தில் இன்னும் சில தக்க நூல்கள்

இருக்கலாமென்று நினைக்கிறேன். நான் நேரில் சென்று

பார்த்தால் நலமே. பின்பு பார்த்துக்கொள்ளலாம்.

“சி. வித்துவான் சுப்பிரமணிய ஐயர் வழக்கம் போலவே வந்துகொண்டிருக்கிறார். குறுந்தொகை” பார்க்கப்பட்டு வருகிறது. 180 செய்யுட்கள் ஆயின. அவருடைய ஞாபக சக்தி திருப்தியாக இருக்கிறது. நல்ல நூற்பொருளை அறியுந்தோறும் உம்முடைய ஞாபகம் அதிகப்படுகின்றது. வேறொன்றையும் பார்க்க முடிய வில்லை. குறுந்தொகை” பார்க்கத் தொடங்கியவுடன் நெடுந்தொகை வந்தது திருவருட் செயலே. பிற பின் எழுதுவேன். எல்லாருக்கும் என் ஞாபகம் சொல்லுக. தேகஸ்திதியை ஜாக்கிரதையாகப் பார்த்துக்கொள்க. செளக்கியத்திற்கு அடிக்கடி எழுதுக.

இது எழுதிப் பூர்த்தியானவுடன் அன்பர் சி. கணபதி ஐயர் திருப்பத்துரிலிருந்து வந்தார். மைத்துனருக்கு வேறு இடத்திற்கு மாற்றலாகிவிட்டமையால் எல்லோரையும் (இல்லாள், குழந்தைகள்) மைத்துனர் அழைத்து வந்துவிட்ட தாகவும் சொல்லிவிட்டு, மற்றவர்களை உம்முடைய. அறையில் தங்க வைத்துவிட்டு உடனே ஜாகை பார்க்கப் புரசப்பாக்கம் சென்றிருக்கிறார். மாலையில் இங்கு வந்து,