பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ಆTaಗಿ இல்லத்தில் 276

விடுவார். எழுதும்படி சொன்னார். இங்கே இருக்கும்படி யாகவும் சொன்னேன். பிற பின் ...

+ அநேக ஆசீர்வாதம்,

அன்பன் வே. சாமிநாதன்.

X x - x

வே. சாமிநாதன், உ திருவேட்டீசுவரன்பேட்டை சென்னை சிவமயம் 29 - 9 - 1931

8-ஏ. எம்.

அநேக ஆசீர் வாதம் உபயகுசலோபரி, நாள் 22 . வ எழுதிய கடிதம் வந்திருக்குமே! அதற்கு இதுகாறும் பதில் வாராமையால் மெத்தக் கவலையடைந்து கொண்டிருக்கிறேன். முன் கடிதத்தில் நான் மடாதிபதி அல்லன்’ என்று நான் எழுதியது எனக்கு நீர் முன்பு எழுதிய கடிதத்தின் தலைப்பில் திருவடித் தாமரைகளில் என்று பாராட்டி எழுதியதை உட்கொண்டுதான். - -

அக்கடிதத்திற் சில கேள்விகள் கேட்டிருந்தேன். அவை பதில் எழுதக் கூடாத நிலைமையிலிருக்கின்றனவோ வென்று ஊகிக்கின்றேன்.

உம்முடைய தேகஸ்திதி செளக்கியமாக இருக் கின்றதா?

உம்மைத் தேடிக்கொண்டு நான்கு தினத்திற்கு முன்பு இரண்டு சந்நியாசிகள் வந்திருந்தார்கள். அவர்களில் ஒருவர் தாடிமுதலிய சந்நியாச உடுப்புகளுடன் காஷாயமும் தரித்திருந்தார். அவருடைய குணம் மிகப் பாராட்டுதற் குரியதாயிருந்தது. நின்றுகொண்டே பேசினார். என்ன சொல்லியும் அமரவில்லை. விசாரித்தபொழுது தாம் கிருஹஸ்தரென்றும், தரித்திருப்பது காஷாயமல்ல, கதரில் சாயம் தோய்த்ததென்றும், குடும்பத்தோடே இருந்து அரசபாக்கத்திலுள்ள ஒரு ஸ்கூவில் இருக்கிறேன்” என்றும்,