பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/281

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - - 280.

ஏதாவது செலவுக்கு வேண்டியிருந்தால் அனுப்பும்படி செய்கிறேன். சங்கோசமில்லாமல் தெரிவிக்கவேண்டும். அடிக்கடி கடிதம் எழுத வேண்டும். எழுதாமல் இருந்தது தவறென்றே சொல்லுவேன். ஒரு நிமிஷப் பொழுது நான் பட்ட கவலைக்கு எல்லையேயில்லை; சசுவரன்தான் அறிவான். இப்போது உம் வெப்பு எம்மட்டில் இருக்கிறதோ தெரியவில்லை.சென்ற கார்த்திகைக்கு உபவாஸ்ம் இருந்தீரா?

  • வரும்போது தலைவர்கள் சொல்லியபடி பனசை வந்து கவனிக்க வேண்டியவற்றைக் கவனித்துக்கொண்டும், செய்ய வேண்டியவற்றை ஒருவராகச் செய்தும், ஞாபகத்துக்குக் குறிப்பு எடுத்துக்கொண்டும் வரக்கூடு மென்று நம்புகிறேன். ஜாக்கிரதையாகப் பழகி வரக் கூடுமே... -

வந்தவர்களில் தாரமங்கலத்தார் உம்மைப் பார்க்க வேண்டுமென்று தாம் வந்ததாகச் சொன்னார் பழக்கம் உண்டென்று சொல்லவில்லை. $

பெரிய புராணம் வாங்கிச் சென்ற சி. கணபதி ஐயர் அப்பால் வரவேயில்லை. எல்லாரையும் தனியே விட்டு வருவதற்கு யோசித்துக்கொண்டிருக்கிறார் போலும்! அல்லது முதற் பதிப்பு முழுவதையும் எழுதி முடித்துக் கொண்டுவர எண்ணியும் இருக்கலாம். சென்று பார்த்துவர எனக்கு இயலவில்லை. -

மயிலாப்பூர் மாப்பிள்ளைக்கு ஜ்வரங் கண்டு மிகவும் அசெளகரியமாக இருந்து தகுந்த சிகித்ஸ்ை களால் வரவர இப்பொழுது குணமாகிக்கொண்டு வருகிறது. இது விஷயத்தில் இப்போது மிகக் கவலை யாகவே யிருந்தது.

பரிசுதான் குறிப்பிடப்படவில்லை. பெறுபவர் நேற்று வந்தார். சாகித்தியம் செய்யப் பழக்கம் செய்து வருவ தாகச் சொன்னார். அதை இப்போது வைத்துக்கொள்ள