பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/282

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

‘岛8葛 நாம் அறிந்த கி.வா.ஜ -

வேண்டாம், பே சி னாற் போது ெம ன் று சொல்லி யனுப்பினேன்.

“குறுந்தொகை” வேலை 200 பாடல் பார்க்கப்பட்டு அப்படியே நிற்கின்றது.

சி. சுப்பிரமணிய ஐயர்க்கு நாலைந்து தினங்களாக ஜ்வரமாக இருக்கிறது. இப்போது குணந்தான். செளக்கிய மான பின்பு வரலாமென்று சொல்லியனுப்பிவிட்டேன்.

நான் ஏகாந்தமாகத்தான் இருந்து வருகிறேன். ஒன்றும் செய்ய முடியவில்லையே யென, மனக்கவலை துணையாக இருந்து வருகிறது. தனியே இருக்கிறேனென்று எண்ண வேண்டாம். காரியார்த்தமாகப் பலர் வந்து போகிறார்கள். படிப்பைப்பற்றிய பிரஸ்தாபமே யில்லை! சிரமமில்லாத காலத்தில் எளிய நடையுள்ள திருவிளை பாடலை முதலிலிருந்து பாராயணம் செய்து வருகிறேன். -இன்றைக்குத் திருமணப் படலம் படிக்கப்பட்டு வருகிறது,

சிரமமாக இ ரு ந் த ா ல் சேந்தமங்கலம் முதலிய வற்றிற்குப் போவதை நிறுத்திக்கொள்ளலாம். மற்றொரு சமயம் வைத்துக்கொள்ளலாம்.

சிர. கோதண்டராமையரிடமிருந்து கடிதம் வந்து கொண்டிருக்கிறது. தி ரு ப்தி யாக வே இருப்பதாகத் தெரிகிறது. * . -

ஆபீசிலிருந்து வந்த பின்பு சி. கல்யாணசுந்தரம் உம்முடைய கடிதத்தைப் பார்க்கும்படி செய்கிறேன். அவன் ஆபீசுக்குப் போன பின்புதான் கடிதம் வந்தது.

மற்றவர்களுக்கு உம்முடைய ஞாபகம் சொல்லி விட்டேன். என் கால் வலி முழு வலியாகவே யிருக்கிறது. L!!!"€AĦ கர்மாக்களை அநுபவித்துத் தொலைத்தல் உத்தமமென்றே எண்ணுகிறேன். - பிள்ளையவர்கள் சரிதத்தை இன்றுதான் படிக்க எடுத்தேன். 50 பா ராக் கள் பார்த்தாயின. பின் எழுதுகிறேன்.

நா-18