பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/295

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 294

ஐயரவர்கள் கடிதம் எழுதினார் அல்லவா? அன்றுமுதல் பூரீமத் ஐயருக்கு அந்தச் சந்நியாசிகள், இவரையும் அந்த மார்க்கத்தில் ஈர்த்துவிடுவார்களோ என்ற கவலை ஆண்டுவிட்டது.

இதுகாறும் தி ரு ம ண ம் செய்துகொள்ளத் தம் பெற்றோர், உற்றார் எவ்வளவோ சொல்லியும் இணங்காத இவர், தாம் சொன்னால்மட்டும் எப்படி இணங்கப் போகிறார் என்கிற ஐயமும் இருந்து வந்தது ஐயரவர் களுக்கு.

முதலில் இவருடைய மனத்தைத் தம் குமாரசின்மூலம் அறிந்துகொள்ளவேண்டும் என விரும்பினார்.

X 媒 X

இவரது பத்திரிகை அலுவலகம் இருந்த முண்டகக் கண்ணி அம்மன் கோவில் தெருவில் வக்கீல் குமாஸ்தா கல்லூர் வி. ராமசாமி ஐயர் என்பவர் இருந்தார். அவர் வக்கீலுக்குப் படிக்கவில்லையே தவிரச் சட்ட அறிவில் மிகச் சிறந்தவராக விளங்கினார். -

அவரிடத்தில் மிகுந்த ஈடுபாடு உண்டு, ஐயரவர் களுக்கு. காரணம், ராமசாமி ஐயரின் உலக விஷயங்கள் பற்றிய அறிவே. கலலூர் ராமசாமி ஐயரின் சகோதரி .ஜானகியம்மாளின் கணவர் சுந்தரப்பையர் கும்ப கோணத்தில் ரீமத் ஐயர் இருந்தபோதே அவருக்குப் பழக்கமானவர். :

சுந்தரப்பையருக்கு ரங்கநாதையர், பாலசுப் பிர மணியன், சேதுராமன் என மூன்று குமாரர்களும், மங்களம், அலமேலு, மீனா என மூன்று பெண்களும் இருந்தார்கள். அவர் பெரிய சம்சாரி. அதனால் தம் சகோதரியின் இரண்டாம் மகள் அலமேலுவை ராமசாமி ஜயர் தம்மிடமே வைத்துக்கொண்டு வளர்த்து வந்தார். அவளுக்குப் பாட்டும், படிப்பும் சொல்லி வைத்தார். அப் போது அலமேலு மிகச் சிறிய பெண்ணாக இருந்தாள்.