பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/296

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

..295 நாம் அறிந்த கி.வா.ஜ.

ஐயரவர்கள் கல்லூர் ராமசாமி ஐயரின் வீட்டுக்குப் போகும்போதெல்லாம் உள்ளேயிருந்து காபியைக் கீழே சிந்தாமல் மெதுவாக நடந்து எடுத்து வந்து கனிவுடன் கொடுப்பாள், அந்தச் சிறு பெண்.

ஏதாவது ஒரு பாட்டுப் பாடேன்’ என அந்தப் பெண்ணிடம் ஐயரவர்கள் சொல்வார். அந்தப் பெண்ணும் சங்கோசமின்றிப் பாடுவாள். ஒருதரம், சபாபதிக்கு வேறு தெய்வம் சமானமாகுமா.க்ருபாநிதி’ என ஆபோகி சாகத்தில் அவள் பாடியதைக் கேட்டவுடன், ‘ஆஹா” என ஐயரவர்கள் பரவசம் அடைந்து போனார். கோபால .கிருஷ்ண பாரதியார் பாடல் என்றால்தான் அவருக்கு

மிகவும் பிடிக்குமே.

  • ராமசாமி, இந்தப் பெண்ணுக்கு நீ வரன் ஏதும் பார்க்கக் கூடாது. இவளுக்கேற்ற மாப்பிள்ளையை நான்தான் பார்த்துத் தரப்போகிறேன்’ என ஐயரவர்கள் சொன்னாராம்.

இப்போதெல்லாம் வயது முதிர்ச்சியால் ஐயரவர் களால் ராமசாமி ஐயரின் வீட்டுக்குப் போக முடிவதில்லை. கி.வா.ஜ., அவர்கள் கலைமகள்’ அலுவலகத்துக்குத் தினமும் போகத்தொடங்கியவுடன்,அதே முண்டகக்கண்ணி அம்மன் கோவில் தெருவிலே இருந்த நண்பர் ராமசாமி ஐயரின் நினைவு ஐயரவர்களுக்கு வந்துவிட்டது.

“நீர் ஆபீஸ் போகும்போது இந்தப் புத்தகங்களை ராமசாமி ஐயரிடம் கொடுத்துவிட்டுப் போக வேண்டும்” எனச் சொல்லி அனுப்பினார். ராமசாமி ஐயரும் இவரைப் பற்றி எல்லா விஷயங்களையும் தெரிந்துகொண்டு இவரிடம் மிக அன்பாக நடந்துகொண்டார்.

Χ - x X. கலைமகளில் தொண்டு :

“கலைமகள் பத்திரிகையின் ஆசிரியராக முதலில் டி. எஸ். ராமச்சந்திரையர் இருந்தார். இலக்கியம், நுண்