பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/297

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 296

கலை, விஞ்ஞானம், சரித்திரம், சிறுகதை, மகளிர் பகுதி, சிறுவர் பகுதி என்று வெவ்வேறு பகுதிகளைக் கொண்டு கலைமகள் பத்திரிகை வெளியாயிற்று.

இலக்கியத்துக்குச் சென்னைப் பல்கலைக் கழகத்தில் இருந்த பேராசிரியர் எஸ். வையாபுரி பிள்ளையும், சரித் திரத்திற்குப் பேராசிரியர் நீலகண்ட சாஸ்திரியாரும், பெண்கள் பகுதிக்கு விசாலட்சுமி அம்மாளும், சிறுவர் பகுதி, விஞ்ஞானப் பகுதி இரண்டுக்கும் வழக்கறிஞரும் தமிழன்பருமான பெ. நா. அப்புசாமி ஐயரும் பொறுப் பேற்றுப் பிரசுரத்துக்கு வரும் கட்டுரைகளைப் பார்வை விட்டுத் தேர்ந்தெடுத்துத் தந்தார்கள். கவுரவப் பதிப் பாசிரியர்கள் என்பதாக இவர்களோடு பேரறிஞர் எஸ். அனவரதவிநாயகம் பிள்ளை, ரசிகமணி டி. கே. சிதம்பரநாத முதலியார், வித்துவான் மு. இராகவை பங்கார், தமிழில் மிக்க ஈடுபாடுள்ள வழக்கறிஞர் கே. வி. கிருஷ்ணசாமி ஐயர், மற்றும் தி. சிவராம சேதுப்பிள்ளை போன்ற பெருமக்களும் இருந்தார்கள்.

ஐயரவர்கள் முதல் இதழில் ஒரு கட்டுரை எழுதி யிருந்தார். பின்பு இரண்டு மூன்று இதழ்களில் தொடர்ந்து எழுத இயலவில்லை. .

இவரும் ஒன்றிரண்டு பாடல்களைத் தவிர எதுவும் எழுதவில்லை. அதுவும் ஏதேனும் ஒரு பக்கத்தில் இடம் மிச்சமாகி, அதை நிரப்பவேண்டுமென்று ஆசிரியர் சொன் னால் சொந்தமாகவே ஏதாவது பாடலை எழுதி நிரப்பி விடுவார். . : . -

1. பண்ணார் க்ராப்இல் தலையிற் பயனிலவே

கண்ணாடி போடாத கண், விருந்தின் பயனெல்லாம் வீணாகும், காபி அருந்தத் தராமல் விடின் ‘’ ‘. . . எனக் கிறள்” என்பதாகக் குறள்போல் இன்றைய சமுதாயப் போக்கைச் சித்திரித்துக் காட்டும் பாடல்களாகச் சிலவற்றை எழுதி வந்தார்.