பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

297 நாம் அறிந்த கி.வா.ஜ.

நாராயணசாமி ஐயரும் மற்றவர்களும், பூரீமத் ஐயரது கட்டுரை ஒவ்வோர் இதழிலும் முதலில் காட்சி யளிக்க வேண்டும் என்று விரும்பினார்கள். எனவே, ஐயரிடமிருந்து எப்படியாவது ஒவ்வோர் இதழுக்கும் ஒரு கட்டுரையைப் பெற்றுவரும் பொறுப்பு இவருடைய தாயிற்று. x

“இனி வெளிவர வேண்டிய பிரபந்தங்களையெல்லாம் ஒவ்வொன்றாகக் கலைமகள்’ பத்திரிகையில் இணைப் பாகக்கூட வெளியிடப் பின்னால் வாய்ப்பு ஏற்படக் கூடும். இப்போது நீங்கள் ஏதாவது ஒரு கட்டுரை மாதந்தோறும் எழுதி வரத்தான் வேண்டும்’ என இவர் அன்பு வேண்டு கோள் விடுத்தார். r

அதோடு இவர் தம்மிடம் ஐயரவர்கள் சொன்ன செய்திகளை நினைப்பூட்டி வந்தார். அவரும் மலரும் நினைவு களாகத் தாம் ஏடுகளைத் தேடிப் பட்ட சிரமத்தைப்பற்றிய வரலாறுகள், ஆங்காங்கே தாம் கண்டதும் கேட்டது'மான செய்திகள் ஆகியவற்றைச் சொல்லலானார். - .

தமிழில் தற்காலம் அதிகம் பயன் தரத்தக்கவை நல்ல ந்டையும், விஷயச் சிறப்பும் கொண்ட வசன நூல்களே யாகும் என வலியுறுத்திய மகாகவி சுப் பிரமணிய பாரதி யார் அத்துறையில் பெரிதும் அக்கறை கொண்டு உழைத்ததைத் தமிழுலகம் நன்கு அறியும்.

ஐயரவர்களும், உரைநடை நூல்கள் எப்படி அமைய வேண்டும்?’ எனச் சொல்லி வந்தார் என்பதை இவரது நாட்குறிப்பு இவ்வாறு எடுத்துக் காட்டுகிறது: .

  • பிழையின்றி இயன்றவரையில் யாவருக்கும் விளங்கும் சொற்களையே உரைநடையில் எழுதும் பழக்கத்தை மேற் கொள்வதே நல்ல முறையாகும். வழக்கற்ற சொற் களையும், திரிசொற்களையும் உரைநடையில் கூடியவரை விலக்குதல் நன்று. தமிழ்நாட்டினர் தம் கருத்தை எளிதில் அறிந்துகொள்ள வேண்டுமென்பதை, எழுதுபவர்கள் தம் நா-19