பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/299

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 298

மனத்தில் கொண்டு எழுதுவதுதான் பயனை அளிக்கும், பேசினாலும் எழுதினாலும் கருத்தை அறிவிக்கும் நோக்கத்தை முக்கியமாகக் கொள்ளவேண்டுமேயன்றிக் கடின நடையைக் கைக்கொள்ளுதல் கூடாது.”

அதுமுதல் இவர் நாட்குறிப்பில் தாம் எழுதி வந்த தடையையே எளிய மெருகேறிய தடைக்கு மாற்றிக் கொண்டார்.

ஐயரவர்கள் சோல்வதை அப்படியே குறித்துக் கொண்டு, பின்னர்த் தொடர்பு பொருந்த எழுதி ஆசானிடம் படித்துக் காட்டினார். அவர் செய்யும் திருத்தங்களுடன், திரும்பவும் நன்றாக எழுதி, அவரது ஒப்புதலுடன் கலைமகளில் அச்சிடத் தந்தார். எத்தனை முறை படித்தாலும் தெவிட்டாது, பொருள் பொதிந்து, எளிமையுடன் கூடிய வண்டானம் முத்துசாமி ஐயர்,” வறுமைப் புலி போன்ற ஐயரவர்களின் கட்டுரைகள் கலைமகள்’ இதழ் ஒவ்வொன்றையும் அலங்கரிக்கத் தொடங்கின. -

笼 K . X

பெண் பார்த்த படலம் : -

ஒரு நாள் ஐயரவர்கள் இவரிடம் கனம் கிருஷ்ணையரின் வ ர ல | ற் ைற ச் சொல்லிக்கொண்டிருந்தார். இவர் அவற்றை எழுதிக்கொண்டு வந்தார்.

அப்போது அண்ணா அங்கே வந்தார்; ஜகந் நாதனுக்குப் பெண் பார்க்க ஏற்பாடு செய்திருக்கிறேன்” என்று ஐயரவர்களிடம் சொன்னார்: இன்னாருடைய மகள் என்றும் தெரிவித்தார்.

‘உம்’ என்பதைத் தவிர ஐயரவர்கள் வேறு எதுவும் கேட்கவில்லை. -

அவரது மனத்தில் என்ன இருக்கிறது என்பதை இவரால் உணர முடியவில்லை. s’