பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.99 நாம் அறிந்த கி.வா.ஜ.

மறு ந ா ள் இ வ. ைர அழைத்துக்கொண்டு பெண் பார்த்துவரப் புறப்பட்டார் அண்ணா. கட்டுக் குடுமியும் கதர் ஜிப்பாவுமாக இருந்த இவரை எல்லோருக்கும் பிடித்திருந்தாலும், ஐயையே! அவர் குடுமி வைத்திருக் கிறாரே “ என்று உள்ளே அந்தப் பெண் யாசிடமோ சோல்லிச் சிணுங்கிக்கொண்டிருப்பதும், பெரியவர்கள். *உரக்கப் பேசாதே’ என்று சொல்வதும் இவருடைய காதில் விழுந்தன.

‘முருகா! இது என்ன சோதனை! என இவர் அப்படியே சமைந்து போனார். என்ன, பெண் பிடித் திருக்கிறதா?’ என அண்ணாவும், அங்கே எல்லோர் மத்தியிலும் வெளிப்படையாகக் கேட்டுவிட்டார்.

பிடிக்கவில்லை என்றால் அண்ணாவுக்குக் கோபம் வந்துவிடுமோ என்கிற அச்சத்தால் வாய்விட்டுத் தம் கருத்தைச் சொல்ல முடியாமல் தலையைமட்டும் ஆட்டினார்.

மேற்கொண்டு மற்ற விஷயங்களைப் பேச, மறு தாளே தாம் ரீமத் ஐயரிடம் வருவதாகப் பெண்ணின் தந்தை சொன்னார். - இவர்கள், வீட்டிற்குத் திரும்பினார்கள். கஜகந்நாதன் திருமணம் செய்துகொள்ளச் சம்மதித்து விட்டான்’ என்று அண்ணா சொன்ன வார்த்தையைத் தான் ஐயரவர்கள் காதில் வாங்கிக்கொண்டார். மேற் கொண்டு, பெண்ணின் தகப்பானார் நாளை இங்கு வந்து தங்களுடன் மற்ற விஷயங்களைப் பேசிக்கொள்வதாகச் சொன்னார்’ என்று அண்ணா சொன்னது எதையும் அவர் காதில் வாங்கிக்கொண்டதாகத் தெரியவில்லை.

மறு நாள் யாரும் ஐயரவர்களின் வீட்டிற்கு வரவில்லை: அப்புறமும் வரவேயில்லை!

கல்யாணமே வேண்டாம். துறவியாகப் போகிறேன் என்று சொல்லி வந்தவன் கல்யாணம் செய்துகொள்ளச் சம்மதிக்கிறபோது, இ வ ன து க ட் டு க் குடுமியா