பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/301

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் 300:

குறுக்கே வந்து நிற்க வேண்டும்!” எனச் செல்லமையர் சொல்லிச் சொல்லி இவரைப் பரிகாசம் செய்தார்.

“நீங்கள். சும்மா இருங்கள். உங்கள் நண்பர் சரி என்றால் அடுத்த முகர்த்தத்திலேயே என் தங்கையை இவருக்குத் திருமணம் செய்துவைக்க நானே ஏற்பாடு செய்கிறேன்’ என்று செல்லமையரின் மனைவி சீதா துடித்தாள். -

இவர் எதையுமே கண்டுகொள்ளாமல், வழக்கம் போலச் செயல்பட்டு வந்தார். -

X X - X ஆசானின் ஆசி பெற்ற இளம் பெண் :

ஒரு நாள் இவர் கலைமகள் அலுவலகத்துக்குக் கிளம்பிக்கொண்டிருந்தார். . . “

அப்போது ஐயரவர்கள், கல்லூர் ராமசாமி ஐயரை நான் நேரே போய்ப் பார்த்து நாளாயிற்று. ஞாயிற்றுக் கிழமை அவருடைய வீட்டிற்குப் போகலாமோ என்று இருக்கிறேன். அன்றைக்கு என அவர் எங்காவது போய் விடப் போகிறார்; நீர் ஆபீசிலிருந்து வரும்போது அவரைப் பார்த்து, நான் ஞாயிற்றுக்கிழமை அவரது வீட்டிற்கு வர இருப்பதாகச் சொல்லி வர வேண்டும்’ என இவரிடம் சொல்லி அனுப்பினார். - .

இவர் அன்று அலுவலகத்திலிருந்து பிற்பகல் 3 மணிக்கே கிளம்பிவிட்டார். ராமசாமி ஐயரின் வீட்டிற்கு வந்தார். கதவு சாத்தியிருந்தது. தட்டினார். -

ராமசாமி ஐயரின் மருமாள் அலமேலு உள்ளே யிருந்து வந்து கதவைத் திறந்தாள். செக்கச் சிவந்த மேனியில் சிற்றாடை கட்டிக்கொண்டிருந்த அந்தப் பெண்ணைப் பார்த்தவுடன் இவர் அப்படியே மலைத்து நின்றுவிட்டார். - - - உள்ளே வாங்கோ “ என மெல்விய குரலில் அந்தப்

பெண் அழைத்தாள்.