பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

301 நாம் அறிந்த கி.வா.ஜ.

இயக்கத்துடன் மாமா இருக்கிறாரா?’ எனக் கேட்டுக்கொண்டு வாசல் படியிலேயே இவர் நின்று விட்டார்.

“அவர் இன்னும் கோர்ட்டிலிருந்து வரவில்லை. மாமி இருக்கிறாள்’ எனத் திரும்பவும் அந்தப் பெண் அழைத்தாள்,

“இந்தப் பெண்ணுக்கும் குடுமி என்றால் பிடிக்காதோ என்னவோ என்கிற சந்தேகம் வந்துவிட்டது இவருக்கு.

அதற்குள், அங்கே யாரு?” எனக் கேட்டுக்கொண்டு மாமியே வந்துவிட்டாள். இவரைப் பார்த்தவுடன். “சோன்னு நினைச்சேன். 2ள்ளே வாங்ெே. அன்பாக, உரிமையோடு இவரை அழைத்துக்கொண்டு உள்ளே சென்றாள். காபி போடத்தான் மாமி போகிறாள் என ஊகித்த இவர், நான் காபி சாப்பிடுவது இல்லை. ஒரு டம்ளர் திர்த்தம் கொடுங்கள், போதும்” என்றார்.

உடனே இவருக்குத் தீர்த்தம் எடுத்துவர அந்தப் பெண் உள்ளே போனான்.

கூடவே பின்னால் சென்ற மாமி, அவர்தான் தீர்த்தம் கேட்டார்னா நீயும் தீர்த்தத்தையா கொண்டு போய்க் கொடு ப் பது?...இரு; இப்போதான் பால் காய்ச்சினேன். இதில் கொஞ்சம் ஜீனியைப் போட்டு நன்னா ஆத்தி எடுத்துண்டு வா’ எனத் தன் மருமாளிடம் சொல்லிக்கொண்டே திரும்பவும் வெளியே வந்தாள். 3. புரீமத் ஐயர் சொல்லி அனுப்பிய தகவலை இவர் மாமியிடம் சொன்னார். -

“மாமா வர்ற நேரந்தான்: நீங்களே நேரிலே சொல்லிட்டுப் போகலாமே” என மாமி சொன்னாள்.

தீர்த்தத்தை ஒரு கையிலும், மற்றொரு கையில் பாலையும் எடுத்துக்கொண்டு, சிற்பி செதுக்காத சிலை போல் அந்தப் பெண் வந்ததை இவர் கண்டார்.