பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/304

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ჭ 0 3 நாம் அறிந்த கி.வா.ஜ.

வந்தன. ராமசாமி ஐயரின் மருமாள் அலமேலு (அம்புலு) ஐயரவர்களுக்கு மிகவும் பிடித்த காபியை எடுத்து வந்தாள் ; உடனே வழக்கம்போல் நமஸ்காரமும் செய்து கொண்டாள்.

இவருக்கும் காபி கொண்டு வா, அம்மா’ என ராமசாமி ஐயர் அவளிடம் சொன்னார்.

அவர் காபி சாப்பிட மாட்டார், மாமா. பால் எடுத்து வருகிறேன்’ என அந்தப் பெண் சொன்னபோது இவர் அசந்து போனார்!

1. ஏதேது, இவரைப்பற்றி நீயும் எல்லாம் தெரிந்து வைத்திருக்கிறாயே! என்று ஐயரவர்கள் சொன்னபோது எல்லோரும் சிரித்தார்கள். அந்தப் பெண் உள்ளேயிருந்து இவருக்கும் தீர்த்தத்தையும், பாலையும் கொண்டு வந்து வைத்தாள்: இவருக்கும் நமஸ்காரம் செய்துகொள்’ என்று ஐயரவர்கள் .ெ சா ன் ன வு டன் இவரையும் வணங்கினாள்.

முன்பு வெளியூகில் அவளைப் பாடச் சொல்லிக் கேட்டாரல்லவா? இப்போது, எங்கே ஒரு பாட்டுப் பாடு, கேட்கலாம்’ என ஐயரவர்கள் சொன்னார். அந்தப் பெண்ணும் அப்படியே உட்கார்ந்து ஐயரவர்களுக்கு மிகவும் பிடித்த கோபாலகிருஷ்ண பாரதியாரின் பாடல் ஒன்றையே மீண்டும் பாடினாள் : :பேஷ்! பேஷ்’ என்றார் ஐயரவர்கள். இந்தப் பெண் யார் யாருக்கு எது பிடிக்கும் என்று தெரிந்து நடந்துகொள்ளும் இயல்புள்ள வளாக இருக்கிறாளே! என இவருக்குப் பின்னும் வியப்பு அதிகமாயிற்று. -

இவரது பக்கம் திரும்பி, உமக்கு இந்தப் பெண்ணைப் பிடித்திருக்கிறதா?’ என்று கேட்டார் ஐயரவர்கள்.

இது என்ன கேள்வி?...அன்று இந்த வீட்டிற்கு வந்து போனதிலிருந்து மனத்திற்கு வேறு ஒன்றையுமே பிடிக் காமல் இவர் படுகிற அவஸ்தை இவருக்கல்லவோ தெரியும்: