பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/320

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 i 9 நாம் அறிந்த கி.வா.ஜ.

பாடியுள்ள பாடல்களைத் தொகுத்து ஒரு நூலாகக் கொண்டுவர விரும்பினார். -

“ஐயா, காந்தமலையான் அருளால்தான் தாங்கள் ஐயரவர்களிடம் வந்து சேர்ந்தீர்கள். தமிழ் வித்துவான் தேர்விலும் வெற்றி பெற்றீர்கள். அப்பெருமானுக்கு உங்களது காணிக்கையாக அவன்மீது நீங்கள் பாடியுள்ள பாடல்களையே இந்த ஆண்டு வெளியிட நாங்கள் தீர்மானித்திருக்கிறோம்” என்று இவரை வேண்டினார்.

தம் ஆசான் தப்பாக நினைக்க மாட்டார் என்றாலும், தாம் அவரிடம் இருக்கும்போது சொந்தமாக எந்த நூலையும் வெளியிடக் கூடாது; எதையாவது ஆர்வத்தில் வெளியிட்டுவிட்டால், கூட இருப்பவர்கள் ஏதாவது நினைக்கக் கூடும்; எந்தச் சுவடியையாவது தேடும்போது, உடனே கிடைக்கவில்லையெனின் தம்மையே சந்தேகிக்கத் தோன்றும்; இந்த அவதூறுகளுக்கெல்லாம் இடம் அளிக்காமல் நடந்துகொள்ள வேண்டுமென்பது இவரது எண்ணம். - -

இந்த ஆண்டு என் ஆசிரியப்பிரானின் எண்ணப்படி மகாவித்துவான் பிள்ளையவர்களது சரித்திரம் வெளிவர வேண்டும், வேறு எதிலும் என் கவனம் போகாது. அதனால் அப்பால் பார்த்துக்கொள்ளலாம்’ என்றார் இவர். - - “உங்கள் விருப்பப்படி அந்தப் பணியும் நிறை வேறட்டும். நீங்கள் அதைப் பார்த்துக்கொள்ளுங்கள், உங்களுக்குச் சிரமம் எதுவும் கொடுக்காமல் நாங்களே இதைக் கவனித்துக்கொள்கிறோம்” என முருகன் சொன்னார். அதற்குமேல் இவரால் எதுவும் சொல்ல மூடியவில்லை. - -- - -

இயற்றிய முதல் நூல் : - - பிறர் மனம் புண்பட இவர் பேசியதில்லை. காந்த

மலை முருகனிடம் இவர் வேண்டிக்கொண்ட் வரம், -