பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/321

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 3.20.

தினையளவேனும் கொடுமை நினையா கெஞ்சம் ஈவாய் ‘ என்பதே, -

நீயாக உனது சொந்தக் கருத்துடன் சொந்த வசனங் களில் உயிர் கலந்து தியானம் செய்வதே பயன்படும்’ என அநுபூதி பெற, நன்னெறி காட்டியவர் பாரதி. அது போன்றே இவரும் காந்தமலை தண்டபாணி சந்தி தானத்தில் விழிநீர் மல்கி, மெய்சிலிர்த்திடப் பாடிய பாடல்கள் பலவாகும். தமக்கு இவர் எழுதிய கடிதங்களில் இருந்த பாடல்களைச் சேகரித்து அன்பர் கணபதி ஐயர் முருகனிடம் அளித்து, அவை யாவும் ஒரு சிறு நூலாக வெளிவரத் துணை புரிந்து காந்தமலையான்மீது இவர் பாடிய பாடல்களை வெளியிடும் பணியில் உதவினார்.”

இவருடைய படைப்புகள் எல்லாவற்றுக்கும் முதலாக முகிழ்த்தது இந்த நூலே. х -

பூரீமத் ஜயரது விருப்பப்படியே மகாவித்துவான் பிள்ளையவர்களது சரித்திரத்தின் முதல் பாகம் அந்த ஆண்டின் இறுதியில் வெளியாயிற்று. அதில், வி.மு.க.வும், இவரும் தமக்குச் செய்த உதவிகளை ஐயரவர்கள் மறக் காமல், இவர்களுடைய நல்லுழைப்பிற்கு ஏற்றபடி, தமிழ்த் தெய்வம் தக்க பலனை இவர்களுக்கு அளிக்கு மென்று கருதுகின்றேன்’ என ஆசி மொழி கூறியிருப்பதைக் காணலாம். . -

ஐயரவர்கள் யாருக்கு எந்தக் கலையில் வல்லமை இருந் தாலும் அவரை அணுகி, அவரிடம் தாம் அறியாதன வற்றைத் தெரிந்துகொள்வதற்கு நாணம் கொண்ட தில்லை. “. . . . . : -

ஒரு முறை குமரகுருபர முனிவ சின் விழாவுக்கு ஐயரவர்கள் இவரையும் அழைத்துக்கொண்டு திருப்பனத் தாள் போனார். அப்போது மடத்தில் நிறைய மாடுகள்

  • காந்தமலை முருகன் தோத்திர மஞ்சசி'