பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/323

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆசானின் இல்லத்தில் - 322

நாங்கள் மரக் கிளைகளை வெட்டித் தழையை ஆடுமாடு களுக்குப் போடுவது வழக்கம். -

ஆனால் மற்றவர்கள்போல் கிளைகளை அடியோடு வெட்ட மாட்டோம்; அப்படி வெட்டினால் மரம் மொட்டையாகிப் பட்டுப் போகும். அதனால் கிளை ஒடிந்து சாயும் அளவுக்குத்தான் வெட்டுவோம். மாடுகள் தழையை உண்ணும். அடுத்த முறை நாங்கள் அந்தப் பக்கம் வருவதற்குள் மரம் தழைதழைத்திருக்கும். மறுபடியும் மாடுகள் மேயலாம். இதனால் ஏற்பட்ட பழமொழிதான் இது என்றார் ஆயர்.

ஆயர் விடை பெற்றுக்கொண்டு சென்றதும் ஐயரவர்கள், இவன் என்ன அப்படி அருமையாகச் சொல்லப் போகிறான்? என்றுதான் நீங்கள் நினைத்திருப் பீர்கள்? இவ்வளவு வருவ: ஆராய்ச்சியிலும் தெரிந்து கொள்ளாத ஒரு நுட்பமான கருத்தைக் கள்ளங்கபடற்ற இந்தஎளிய கிராமவாசியிடமிருந்து தெரிந்துகொண்டேன்” என்னும்போது உணர்ச்சி வசப்பட்டார். அவரால் அதற்குமேல் பேச முடியவில்லை. o, . . . . . . . . . . . . -

இந்தப் பழமொழியை முன்பு கேட்டதில்லையோ?” என்று இவர் கேட்டார். .” - . * கேட்டதேயில்லை. கே. ட் டி ரு ந் த இ! ம் அதன் உண்மைப் பொருள் விளங்கியிராது. இப்போது இவ்வாயர், பழமொழிப் பாட்டுக்குப் பொருள் சொன்னார். திவ்யப் பிரபந்தப் பாசுரத்துக்கு விளக்கம் கூறிவிட்டார்! १ :இந்த நாட்டில் பச்சை மரத்தைக் காரணமின்றி யாரும் வெட்ட மாட்டார்கள். ஆயர்கள்மட்டும், ஆடு மாடுகள் தழையைத் தின்பதற்காக வெட்டுவார்கள். அதனால் அப்படிச் சொன்னார்கள் என்று எண்ணினேன். இப்போதல்லவா உண்மை தெரிந்தது! இடையன் எறிந்த மரம், முழுவதும் மரத்தினின்று வேறுபடாமல், இயல்பாக மரத்தோடு இ ைண ந தி ரா மல் இரண்டுங்கெட்டான் நிலையில் இருக்கும் என்ற உண்மையை இன்றுதான்