பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/324

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

323 - நாம் அறிந்த கி.வா.ஜ.

உணர்ந்தேன். இடையன் எறிந்த கடைமரம் ஒத்து” என்று சீவக சிந்தாமணி'யில் வருகிறது. அங்கே வேதனையும் தீராமல், உயிரும் போகாம்ல் இருக்கிறேன் என்று சொன்ன குறிப்பு இது என்று நச்சினார்க்கினியர் எழுதியிருக்கிறார். அப்படி எழுதியும் அன்று விளங்காமல் இருந்தது இன்று விளங்கியது’ என்று ஐயரவர்கள் , ஆவலுடன் கேட்டுவந்த இவர்களுக்கு அறிவுறுத்தினார்.

X x - X

இதுபோன்ற நாடோடிப் பழமொழிகளையும், பாடல். களையும், கதைகளையும் தொகுப்பதில் ஐயரவர்களின் மாணவராகிய இவருக்கு ஒரு தனி ஈடுபாடு உண்டு.

காலத்தால் மாறுபடாத தெய்வ நம்பிக்கை, சமயப் பற்று ஆகியவற்றை அவற்றில் காணலாம். எழுதப் படிக்கத் தெரியாத பாமர மக்களால் இயற்கைச் சூழ். நிலையில், க ட் டு ப் பாடி ன் றி பெருகிய உணர்ச்சி மேலீட்டால் தோன்றிய இலக்கியம் அவை. ஆதலின் அவற்றைக் காட்டு மல்லிகைக்கும்; மலையருவிக்கும் ஒப்பிடலாம்’ என்பதாக நாடோடி இலக்கியத்தில் உள்ள தணியாத ஆர்வமுடன் இவர் குறிப்பிடுவார். ; : . . . . .

தமிழ்ப் பழமொழிகள் நூல் வடிவிலே வருவதற்கு அன்பர் கி.வா.ஜ. அவர்களே முழு முதற்காரணமென்றால், மிகையாகாது. நாட்டுப்புறப் பாடல்கள் சிலவற்றைச் சிறப்பான முறையில் தொகுத்துத் தஞ்சைச் சரஸ்வதிமகால் நூல் நிலையத்திற்கு அன்பர் கி.வா.ஜ. வழங்கியிருக்கிறார். அந்தத் தொகுப்புக்கு மலையருவி’ என்று பெயர். அந்த மலையருவி நூல் இன்று பெரும்பாலான இளைஞர் களுக்கு ஊன்றுகோலாக - சிறப்பாக, திரைப் படங்களிலே. நாட்டுப்புறப் பாடல்களைச் சேர்த்திட விரும்புகிறவர் களுக்குப் பேருதவியாக உள்ளது’ எனத் தமிழக முதல்வர் டாக்டர் கலைஞர் மு. கருணாநிதி குறிப்பிட்டுள்ளார்.