பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

-3.3 - நாம் அறிந்த கி. வா. ஜ.

வகையில் இவருக்குப் பாட்டுப் பாடும் ஆற்றலும் இருந்து வந்ததால் தினமும் ரெயிவில் போய்வரும் போது ரெயில் ஒட்டத்தின் குதியோசைக்கேற்ப இவர் ஏதாவது பாடிக் கொண்டிருப்பார். மகிழ்ச்சி, துயரம் இரண்டிலும் இவரது உணர்ச்சி பாட்டு வடிவில்தான் வெளிப்படும்.

இவருடைய நண்பர்களும் தங்களுக்குத் தோன்று கிற கருத்துக்களைச் சொல்வி, பாட்டு எழுதித் தரும்படி கேட்டார் களாம். இவரும் எழுதித் தருவாராம். அவர்கள் அதைப் பலரிடமும் காட்டி, தாங்களே எழுதியதாகக் கும்மாளம் போடுவார்களாம்.

இதனாலெல்லாம் எதையும் தம்மால் எழுத முடியும் என்னும் நம்பிக்கை இயல்பாக இவரிடம் உரம் பெற்று வந்தது: தமிழில் எழுதுகிற ஆர்வம் பெருகிற்று: பிறர் சுவைக்கப் பலவும் சொல்ல வேண்டுமென்ற வேட்கை மிகுந்து வந்தது.

தாமே உட்கார்ந்து திருப்புகழ், திருவாசகப் பாடல் களை உருப்போடலானார், விநோத ரச மஞ்சரி’ படித்தார். அதிலுள்ள செய்யுட்களைப் போல் தாமே எழுத முயன்றார். -

இவரது கன்னி முயற்சியில் உருவானது போற்றிப் பத்து என்னும் பதிகம். நடராஜரைப்பற்றி அமைந்தது அது. அதனை அப்போது வெளிவந்துகொண்டிருந்த ‘ஒற்றுமை: என்னும் பத்திரிகைக்கு அனுப்பி வைத்தார். பிரபல நாவலாசிரியர் வடுவூர் துரைசாமி ஐயங்கார் நடத்தி வந்த பத்திரிகை அது. அவரும் அதைத் தம் பத்திரிகையில் வெளியிட்டார். -

தமது முதல் டாட்டை அச்சில் கண்டபோது இவர் அடைந்த ஆனந்தம் இன்னது என்று சொல்லி முடியாது: கொங்கணாம்பட்டி நரசிம்மையர்

குளித்தலைப் பள்ளிக்கூடத்தில் ஏ க்ரூப் (விடிசி) என்று சொல்வார்கள்-வெர்னாகுலர் (தாய்மொழியில்)