பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/35

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 弓4

காம்போசிஷன் - டிரான்ஸ்லேஷன் (கட்டுரை எழுதுவது, மொழிபெயர்ப்பது) - இந்த அளவுக்குத்தான் த மி ழ் வகுப்புக்கும் இவருக்கும் தொடர்பு இருந்தது.வாரத்திற்கு இரண்டு நாள் - ஒரு பீரியட் - தமிழாசிரியர் வருவார். அன்று அந்தத் தமிழ் வகுப்பில் இவருடைய நண்பர்கள் ஒருவர் மாற்றி ஒருவர் ஒற்றுமை பத்திரிகையை இவரிடமிருந்து பிடுங்கிக்கொண்டு படிக்கலானார்கள், இதில் முதலில் நான், நீ எனப் போட்டி. தமிழாசிரியர் வகுப்பறைக்குள் நுழைந்ததைக்கூடக் கவனிக்கவில்லை

என்னது, ஒரே கலாட்டா! எல்லோரும் அவர் அவர்கள் இடத்தில் போய் உட்காருங்கள்’’ என்று ஆசிரியர் அதட்டிக்கொண்டே தம் நாற்காலியில் போய் அமர்ந்தார். -

திடீரென்று ஒரு பையன் எழுந் திருந்து, ‘ஜகந்நாதன் சொந்தமாகப் பாட்டு எழுதியிருக்கிறான், சார். இந்தப் பத்திரிகையில் வந்திருக்கிறது’ என அந்த ஒற்றுமை’ இதழைக் கொண்டுபோய் ஆசிரியரிடம் கொடுத்தான்.

அவர் இவரை ஒரு முறை ஏற இறங்கப் பார்த்து விட்டு அந்தக் கவிதையைப் படிக்கத் தொடங்கினார்.

தப்பு எதையேனும் எடுத்துக் காட்டப் போகிறாரோ ஏன இவருக்கு நெஞ்சு திக்திக்கென அடித்துக்கொண்டது. ஆசிரியர் அந்தப் பாடலை முழுவதும் படித்தவுடன் இவரை வியப்புடன் நோக்கினார். *

‘ஜகந்நாதா, இதை நீயா எழுதினாய்? உன் பெயர் போட்டிருக்கே! எங்கே நீ எழுதிய பாட்டைச் சொல், பார்ப்போம்’ என்று கேட்டார்.

இவர் அந்தப் பாடலைச் சொன்னவுடன் கேட்டு மகிழ்ந்ததோடு இவரது அருகில் வந்து இவரைத் தட்டிக் கொடுத்தார். மிக நன்றாகப் பாடியிருக்கிறாய். இதற்கு முன் குறைந்தது முந்நூறு பாடல்களாவது நீ எழுதி யிருக்க வேண்டுமே” எனப் பாராட்டினார்.