பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/36

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

85 நாம் அறிந்த கி. வா. ஜ.

‘நான் அவ்வளவு எழுதவில்லை’ எனத் தயங்கிக் கொண்டே இவர் சொன்னார். ‘விநாயகர் மேல் ஒரு பாட்டுச் சொல்லலாமே என்றார் ஆசிரியர். உடனே இவரும் ஒரு பாட்டுச் சொன்னார். ஆசிரியருக்கு ஒரே மகிழ்ச்சி. -

இப்படி இவரைத் தட்டிக் கொடுத்துப் பாராட்டிய தமிழாசிரியரின் பெயர் கொங்கணாம்பட்டி நரசிம்மையர் தமது ஆற்றலைப் பாராட்டிய அந்தத் தமிழ்ப் பண்டி தரை இவர் மறந்ததேயில்லை. - - “இளம்பூரணன்”

தமிழாசிரியரே இவரைப் பாராட்டியவுடன் இவரது வகுப்பு மாணவன் ஒருவன் இவரை “இளம்பூரணன்” என்று அழைக்க ஆரம்பித்தான். அதுமுதல் பள்ளி நண்பர்கள் அனைவருமே இவரை இளம்பூரணன்’ என்றே அழைக்க லானார்கள்.

இப்படிப் பள்ளிக்கூடத்தில் படித்துக்கொண்டிருந்த போது இவரது பன்னிரண்டாம் பிராயத்திலேயே கவிதை எழுத வேண்டுமென்ற ஆர்வம் முளைத்துவிட்டது. இவருக்கு இலக்கணம் தெரியாது. கவிதை இலக்கணம் தெரியாததற்கு முன்பே கவியின் ஒசை ஒருவாறு இவரது மனத்துக்குத் தட்டுப்பட்டது. பாட்டின் ஓசையை ஒருவாறு கண்டுபிடித்துப் பாடுவது இவரது வழக்கம், ஸ்வர ஞானம் உண்டாவதற்கு முன்பு இசைஞானமும்,’ ராக ஞானமும் உண்டாவது எப்படி இயல்போ அது. போலத்தான் இதுவும் இயல்பு போலும்! -

“இளம்பூரணன்” என்கிற பட்டப் பெயர் பெற்ற உற்சாகத்தில் இவர் தொடர்ந்து தனிப் பாடல்கள் பலவற்றை எழுதினார். , , புதுச்சேரியிலிருந்து வெளியான கற்பகம்’, ‘ஆத்ம் சக்தி போன்ற பத்திரிகைகளுக்கு அவ்வப்போது அவற்றை அனுப்பினார். பாவேந்தர் பாரதிதாசனின்