பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 36

கவிதைகள் இப்பத்திரிகைகளில் வரும். இவருடைய ‘கவிதைகளும் இவற்றில் வர ஆரம்பித்தன. பராசக்தி”, லட்சுமி போன்ற வேறு பத்திரிகைகளும் இவருடைய கவிதைகளை வெளியிட்டன. +

“புலவர் பெருமான்’

இவருடைய கவிதைகளை வெளியிட்ட பத்திரிகை ஆசிரியர்கள் இவரை நேரில் பார்த்ததில்லை. இவருடைய பாடல்களின் சொல்லமைப்பு, பொருள், மரபு இலக்கியங் களை யொட்டிய யாப்பு அமைப்பு இவற்றைக்கொண்டு இவரை மிகவும் வயதான முதிர்ந்த தமிழ்ப் பெரும் புலவ ராகக் கருதிக்கொண்டோ என்னவோ இவருக்குக் கடிதம் எழுதும்போது, ‘ புலவர் பெருமானே’ என விளித்து எழுதுவார்கள். - - - - - * வைதிகப் பிச்சு’

தூத்துக்குடி வ. உ. சி., கல்லூரியில் முதல்வராக இருந்த அமரர் திரு அ. சீனிவாசராகவன், அன்பர் கி.வா.ஜ-வைப்பற்றி இவ்வாறு எழுதியிருக்கிறார்:

கி.வா.ஜ-வின் சொற்பொழிவு முற்றும் இலக்கிய மணம் கமழ்வதாக இருந்தது. பழமையும், புதுமையும் இணைய முடியாது என்ற எங்கள் க ரு த், ைத ப் பொய்யாக்கும்வண்ணம் அவ்விரண்டையும் மிகவும் நன்றாக இணைத்துப் பேசினார். நான் மெய்ம்மறந்து கேட்டுக்கொண்டிருந்தேன். அன்றைய பேச்சு எனக்கு மறக்க முடியாத அநுபவம். ‘ * .

அன்று வரை அவர் கி.வா. ஜ-வை நேரில் பார்த்த தில்லை. கி.வா.ஜ., மகாவித்துவான் சாமிநாதையரிடம் அளவற்ற பக் தி கொண்ட மாணாக்கர், சிறந்த கல்விமான், என்ற அளவுக்குமட்டுமே இவரைப்பற்றிக் கேள்விப்பட்டிருந்தார், அன்பர் சீனிவாசராகவன்.

  • நூல்: வளரும் தமிழ் :- அ. சீ. ரா., கட்டுரை:

“நடமாடும் இலக்கியக் களஞ்சியம்.'