பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/365

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகள் மைந்தன் - 364,

பாரத ஜோதி போன்ற பல தமிழ்ப் பத்திரிகைகளிலும், சில ஆங்கிலப் பத்திரிகைகளிலும் அவ்வைபவம்பற்றிய தகவலும் வெளியாகியது.

ஆயிரம் பிறை கண்ட ஐயரவர்களின் சதாபிஷேக விழா, கொண்டாட்டமாக, தேசிய விழாப் போன்று கும்ப கோணம், உத்தமதானபுரம், மோகனூர், ஈரோடு, சத்திய மங்கலம், திருச்சி, மதுரை, புதுக்கோட்டை, திருநெல் வேலி, திருச்செந்தூர், வாணியம்பாடி, வாலாஜாபாத், பாலக்காடு, மங்களுர், திருவனந்தபுரம், யாழ்ப்பாணம், ரங்கூன் எனத் தமிழகத்தில் மட்டுமின்றித் தமிழ் மக்கள் வாழும் பல இடங்களிலும் சிறப்பாக தடைபெற்றது.

நினைத்தால் தங்களால் எதையும் சாதிக்க முடியும் என்பது போல மக்களிடையே தமிழ்ப் பற்றை, தமிழ் விழிப்புணர்ச்சியை உண்டாக்கி இத்தகையதோர் அற்புதச் சாதனையைப் படைக்கப் பத்திரிகையாளர்கள் பெரிதும் உதவினார்கள். - ஆசானுக்குக் கல்கி வழங்கிய பட்டம் :

இவருடைய நண்பரான கல்கி"யும் *ஆனந்தவிகட னில் தொடர்ந்து சில வாரங்கள் ஐயரவர்களின் சதாபிஷேகம் குறித்து எழுதினார். - - -

என்னுடைய நண்பர் என்பதற்காகச் சொல்ல வில்லை; தமிழில் எதனையும் தெளிவாகவும், சுவையா கவும் எழுதலாம் என எழுதிக் காட்டினவர் கல்கி. எதை எழுதினாலும் பளிச்சென்று தெளிவாக விளங்கும் நடையில் எழுதினார். ஆவலைத் தாண்டும் வகையில் எழுதினார். ஒரு முறை படித்ததையே திரும்பத் திரும்பப் படித்துச் சுவைக்கும்படி எழுதினார். பெரிய புள்ளிகளைப்பற்றிய சித்திரங்கள் அவருடைய எழுத்தில் வண்ணமும் வடிவமும் பெற்று மலர்ந்தன. -

எதையும் தாம் நன்றாகப் புரிந்துகொண்டு யாருக்குச் சொல்கிறோமோ அவர்களின் மனநில்ையையும் புரிந்து