பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/366

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

,365 தாம்.அறிந்த கி.வா.ஜ

கொண்டு அவர்கள் உளங்கொள்ளும் வகையில் எழுதும் உத்தி கைவரப் பெற்றவர் கல்கி’ என இவர் கல்கி'யைப் புகழ்வது உண்டு. -

ளங்களுடைய ஆசிரியப்பிரானின் சதாபிஷேக வைபவம் குறித்து ஆனந்தவிகட னில் கல்கி அவர்கள் எழுதியதைப் படித்துப் பாருங்கள். அவருக்குத் தமிழ்த் தாத்தா’ என்ற பட்டத்தையே கல்கி தாம் அப்போது வழங்கினார்’ என இவர் பலமுறை பெருமையாகச் சொன்னதும் உண்டு. கல்வி வழங்கிய தமிழ்த் தாத்தா என்ற பட்டப் பெயரே நிலைத்துவிட்டது.

இவர் பிற்காலத்தில் தம் ஆசிரியப்பிரானின் வாழ்வு . இலக்கியப் பணிகள்” என்பதாகச் சுருக்கமாய் ஒரு நூல் எழுதினார். அது சாகித்திய அகாதமி வெளி வீடாக வந்துள்ளது. . - -

ஐயரவர்களின் சதாபிஷேக விழாவுக்கு முன்னும் பின்னும் விகடன் என்று முடிவில் கையெழுத்திட்டுக் *கல்கி’ எழுதிய பாராட்டுரை தனிச் சிறப்புள்ளது:

‘ஐயரவர்கள் தம் இளமைப்பிராயத்தில் அரும்பாடு பட்டுப் படித்ததனால்தான் தமிழ் மொழிக்கு வேறு எவராலும் செய்யப்பெறாத மகோபகாரம் செய்தல் சாத்தியமாயிற்று.

“தமிழ்ச் செல்வம், தமிழ்ச் செல்வம் என்றெல்லாம் நாம் பெருமையடித்துக்கொள்கிறோம். ஐயரவர்களின் அரிய முயற்சி இல்லாமற் போயிருந்தால், உங்களுடைய தமிழ்ச் செல்வம் எங்கே?’ என்று கேட்பவர்களுக்கு, எங்கேயோ பூமியில் புதையுண்டு கிடக்கிறது. தோண்டிப் பார்த்தால் ஒருவேளை, அகப்படலாம் என்றே பதில் சொல்ல வேண்டியிருந்திருக்கும். ... •

தமிழ் மொழிக்கும். தமிழ் நாட்டுக்கும் அத்தகைய பரமோபகாரம் செய்திருக்கும் - இன்னமும் செய்துவரும் .