பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/369

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகன் மைந்தன் - 3.68

  • ஆனந்த விகடன் சொல்வதுபோல், காலஞ்சென்ற சுப்பிரமணிய பாரதியார் அவர்களும், டாக்டர் சாமி நாதையர் அவர்களும் தற்காலத் தமிழ் வானில் உதயமான இரண்டு பெரிய நட்சத்திரங்களாவார்கள். அந்த இரண்டில் ஒரு நட்சத்திரமாவது இன்னும் ஒளி வீசிக் கொண்டிருப்பது நமது பாக்கியமாகும்’ எனச் சொல்லி மகிழ்த்தார்கள். . அடுத்த இதழில் ரீமத் ஐயருக்கே விகடன் எழுதிக் கொண்டது போல் கல்கி எழுதியிருந்த கடிதம்:
  • தமிழ்த் தாத்தா பூர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் சமூகத்துக்குப் பேரன் பரிவுடன் எழுதிக் கொள்வது: z =

பெரியவாள் என்ன யோசிக்கிறீர்கள்? இது என்ன புதிய பட்டமாயிருக்கிறது, இவன் யார் கொடுப்பது என்றா? இதனைத் தாங்கள் நிராகரிக்க மாட்டீர்கள் என்று நம்பு கிறேன். சகலமும் அறிந்த பெரியாராகிய தாங்கள், நான் அளித்திருக்கும் பட்டத்தின் பொருத்தத்தை அங்கேரிக் காமல் இருக்க முடியாது. . . . . . . . . . . . . . ‘முதலாவது, ஒளவையாருக்கு எப்படித் தமிழ்ப் பாட்டி என்னும் பட்டம் பொருந்துமோ அதுபோலவே, தங்களுடைய பிராயத்தினாலும், தமிழுக்குத் தாங்கள் செய்திருக்கும் தோண்டினாலும் தமிழ்த் தாத்தா’ என்னும் பட்டம் தங்களுக்குப் பொருந்தும்.

இரண்டாவதாக மேற்படி பட்டத்திலுள்ள இரண்டு த் களையும் நீக்கிவிட்டால், தாங்கள் தமிழ் தாதா? (வள்ளல்) ஆகிறீர்கள். நமது நாட்டின் பரம்பரை வழக் . கத்தை அதுசரித்து அகப்பட்ட நூல்களையெல்லாம் ஒளித்து வைக்காமல், அச்சிட்டு வெளியாக்கிப் பதினாயிரக்கணக் கானவருக்குப் பயன்படும்படி செய்த தங்களைத் தமிழ் தாதா என்று சொல்லாமல் வேறு யாரைச் சொல்வது?

மூன்றாவதாக, ருசி கண்ட பனை உறியைத் தாவும் என்பதுபோல் தமிழன்பர்கள் இன்னமும் தங்களை