பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/370

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36.9 தாம் அறிந்த கி.வா.ஜ.

நோக்கி, தமிழ் தா தா - தமிழ் நூல்கனைத் தா தா” என்று கேட்டுக்கொண்டுதான் இருக்கிறார்கள் (மேற்படி சிலேடை என் சொந்தமல்ல, இரவல்தான் என்பதையும் பெரியவாளிடத்தில் தெரிவித்துக்கொண்டுவிடுகிறேன்).

“இவ்வளவு பொருத்தமான பட்டத்தைத் தாங்கள் அங்கீகரிக்காவிட்டாலும் நான் என்னவோ இந்தப் பட்டத் - தால்தான் தங்களை அழைப்பேன். ஏனென்றால், - ‘மகாமகோபாத்தியாய, தா சுழி ண ா த்ய கலாநிதி” முதலியவை வாயில் நுழைவதே கடினமாயிருக்க, தமிழ்த் தாத்தா’ என்பதோ தங்கள் தமிழ் வசன நடையைப்போல் எளிதாயிருக்கின்றது. - -

“கடைசியாக ஒன்று; மார்ச் 6-ஆம் தேதி வைபவங்கள் முடிந்து 7-ஆம் தேதி பிறந்ததோ இல்லையோ, உடனே இந்த வயது விவகாரங்களையெல்லாம் மறந்துவிடுங்கன். தப்பித் தவறி வயதைப்பற்றிய ஞாபகம் வந்தால் 81 என்பதை திருப்பி வைத்து 18 என்று எண்ணிக் கொள்ளுங்கள். - - - எங்களுக்குக் கதை கேட்பதில் மிகவும் பிசியம், தங்கள் சொந்தக் கதையை முழுதும் பூரணமாய்க் கேட்க வேண்டுமென்று ஆவல் கொண்டிருக்கிறோம்....’

அதற்கு அடுத்த வாரம் கல்கி அவர்கள், ஐயரவர் களைப்பற்றிய கட்டுரைகள் அடங்கியதாகவே ஆ. வி. இதழ் வெளிவரும்படி செய்தார். -

இவரும் டாக்டர் ஐயகின் சதாபிஷேக மலர் என்ப தாகக் கலைமகள் தனிப்பிரசுரத்தை 6.3.35-இல் வெளி யிட்டார். அதன் பிரதிகள் விழா மண்டபத்திற்கு வந்திருந்த அனைவருக்கும் வழங்கப்பட்டன. -

1935-ஆம் ஆண்டு மார்ச் 6-ஆம் தேதி ரீமத் ஐயரது சதாபிஷேக விழா சென்னைப் பல்கலைக் கழக மண்ட பத்தில் சிறப்பாக நடைபெற்றது. - .

இதுபற்றி 17.4.3.5-இல் தமிழ்த் திருவிழா என்கிற தலைப்பில் கல்கி இப்படி எழுதியிருத்தாள் : * .