பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/371

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கலைமகன் மைந்தன் . - - 370,

சென்ற .ேஆம் தேதி புதன்கிழமை ஸ்ெனேட் மண்ட பத்தில் நடந்த வைபவத்தை யாராவது டாக்கி” யில் எடுத் திருந்தால் எவ்வளவு நன்றாயிருக்கும் என்று விகடனு'க்குத் தோன்றிற்று. நூறு வருஷத்திற்குப் பிறகு டாக்கி” காட்டப்பெறுமானால் அக்காலத்தில் வரப்போகும் நம் சந்ததிகள் நம்முடைய தமிழயிமானத்தைக் குறித்துப் பெரிதும் பாராட்டிப் போற்றுவார்கள். 20-ஆம் நூற். ாண்டின் ஆரம்பத்தில் தமிழ்நாட்டில் தமிழ் புறக்கணிக்கப் பட்டது என்றால் நம்பவே மாட்டார்கள்.

மகாமகோபாத்தியாய சாமிநாத ஐயரவர்களின் எண்பதாம் ஆண்டு நிறைவு விழா இவ்வளவு சிறப்பாக் நடைபெற்றது.குறித்து விகடனுக்கு ஏற்பட்ட மகிழ்ச்சிக்கு அளவில்லை. வைபவம் முடிந்ததும் வெளிவந்த பிரபல அட்வொகேட் ஒருவர், மூன்று வருஷத்திற்கு முன்பு இத்தகைய வைபவம் ஒன்று தடக்கக் கூடுமென்று யாரும் எதிர்பார்த்திருக்க முடியாது’ என்றார். சமீப காலத்தில் தமிழ்நாட்டில் தமிழ் அபிமானம் அவ்வளவு அபிவிருத்தி அடைந்திருக்கிறது என்பது அவருடைய கருத்து. - “அரசியல் பிரச்னைகள், சமூகப் பிரச்னைகள் முதலிய வற்றில் தமிழர்கள் எவ்வளவு சண்டை பிடித்துக் கொண்டாலும் தமிழ்த் தாயைப் போற்றுவதிலாவது எல்லோரும் ஒன்றுபட இடமிருக்கிறது என்பதற்கு மேற்ப வைபவம் நிதரிசனமாயிருந்தது. -

கன்ம் பொருந்திய லர் முகம்மத் உஸ்மான் அக்கிராசன பீடத்தை அலங்கரித்தார். திருவாளர் சிவராம சேதுப்பிள்ளை, ஒலைச்சுவடியில் எழுதிய உபசாரப் பத்திரத்தைப் படித்துக் கொடுத்தார் (இதைப் படிக்கும்போது அவர் பட்ட கஷ்டம், ஐயரவர்கள் க ைற ய ர ன் அசித்த பழைய ஒலைச்சுவடிகளைப் படிப்பதற்கு எவ்வளவு கஷ்டப்பட்டிருக்க வேண்டு மென்பதை ஒரு தமிழ்ப் பண்டிதருக்கு ஞாபகப்படுத்திற்று).