பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி - 38

கிறேன், என்று இவர் சதா நண்பர்களுடன் ஊரைச் சுற்றுவது அவருக்குக் கொஞ்சங்கூடப் பிடிக்கவில்லை.

போச்சு! புலவர் பெருமான் என்று வேறே குடுமி யில் பூச் சூட்டிவிட்டார்களா? இவன் இனி எங்கே படித்து உருப்படப் போகிறான்?’ என அடிக்கடி கத்த ஆரம்பித்தார் மாமா. -

அந்த ஆண்டு எஸ்.எஸ்.எல். ஸி. தேர்வு எழுத இவருக்குச் செலக்ஷன் ஆகவில்லை. இதுதான் சாக்கு என வட்டியும் முதலுமாக இவருடைய மாமா இவரை அன்று நன்றாக அடித்துவிட்டார். -

என்னை அடித்தால் நான் என்ன செய்வேன்? நன்றாகத்தான் படித்தேன். அண்டர் ஏஜ்-வயது குறைவு என்று சொல்லி செலக்ஷன் செய்யவில்லை’ என இவர் எவ்வளவோ சொன்னார். உண்மையும் அதுதான். கோபத்தில் உண்மையை யார் பார்க்கிறார்கள்? இவர் சொன்னதை இவருடைய மாமா காது கொடுத்துக் கேட்கவில்லை.

அடுத்த ஆண்டு தேர்வு எழுதத் தொடர்ந்து படித்தார். நடுவில் முடக்குவாத நோய் (ருமாட்டிஸம்) வந்தது. மூன்று நான்கு மாதங்கள் பள்ளிக்கூடத்திற்கே போக முடியாமல் போய்விட்டது. இந்த ஆண்டு டேர்ம் டேஸ் (பள்ளிக்கு வரவேண்டிய நாட்கள்) போதவில்லை யென்று சொல்லிவிட்டார்கள். அப்போதும் இவரால் உயர்நிலைப் பள்ளி இறுதித் தேர்வு எழுத முடியாமல் போய்விட்டது.

இவ்வாறு இவரது பள்ளிப் படிப்பு தடைப்பட்டுப் போனது இவருக்கு மிகவும் வருத்தம் அளித்தது. விரக்தி மனப்பான்மை

மேலே என்ன செய்வது என்று இவருக்குத் தெரிய வில்லை. மோகனூருக்கே திரும்பி வந்துவிட்டார்.