பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/40

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

39 நாம் அறிந்த கி. ಖT. 婴3 -

தேர்வில் உட்காரக்கூடத் தகுதியில்லாதவராக ஊருக்குத் திரும்பி வந்த தம் பிள்ளையைப் பார்த்த பெற்றோர்களுக்குத் துக்கம் தாங்கவில்லை.

பிள்ளை நன்றாகப் படித்து, நல்ல வேலைக்குப் போவான். பிறகு நம் கஷ்டங்கள் தீராமலா போகும்?” எனக் கனவு கண்டு வந்த பெற்றோர், “நம் துன்பம் இவனால் தீ ரா து போல் இருக்கிறதே என மனம் வெதும்பினார்கள். - -

இவருடைய இளமைக் கால நண்பராகிய செல்லமும் அப்போது மோகனூரில் இல்லை. தமக்கு ஆறுதல் அளிக்க யாருமே இல்லாததுபோல முதன்முதலாக அப்போது தான் இவர் உணர்ந்தார். துணை ஏதுமின்றித் தாவிப் படரக் கொழுகொம்பில்லாத தனிக் கொடிபோல் இவரது மனமும் தள்ளாடியது. தம் உள்ளத் துயரை மாற்றிக் கொள்ள, துணைநாடிக் காந்த மலை முருகன் கோவிலுக்கு அடிக்கடி போய்வரத் தொடங்கினார். -

மற்றவர்கள் போகும் வழியிலேயே போய்க் கொண்டிருப்பது, அதனைத் தம்மால் தொடர முடியாத போது உள்ளம் குமைந்துபோய்ச் சாவது -சீ! இது என்ன வாழ்க்கை என எண்ணும்போது இவரது உள்ளம் கசந்தது. -

வாழ்க்கையில் முன்னேற ஒரு வழி அடைபட்டு விட்டது . என்றால் அதைத் தவிர வேறு வழிகளே இல்லையா?” என்னும் ஆராய்ச்சியில் இவரது உள்ளம் குதி போட்டது. -

நாமே நமக்கென்று சில பல வேலைகளை ஏற்படுத்திக்கொண்டால் என்ன?’ எனச் சிந்திக்கத் தொடங்கினார், அப்போது இ வ. ர து உள்ளத்தில் நம்பிக்கை பிறந்தது. - بر காவேரி நதி பாயும் கிராமச் சூழ்நிலையிலே வளர்ந்து வந்த காரணத்தால் இவரது மனம் லேசாகக் காற்றோடு