பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/41

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 40.

பறந்து, காவேரியோடு துளைந்து, மலரோடு மகிழ்ந்து உலாவியது. எத்தனையோ பிஞ்சுக் கற்பனைகள் இவருக்குத் தோன்றிக் கவிகளாக மலர்ந்தன.

  • குருவிகள் தம் இச்சைபோல் கூடுகள் கட்டி மகிழ்வோடு வாழ்கின்றனவே! மரங்களில் உட்கார்ந்து கிளிகள் பேசி மகிழ்கின்றனவே! விலங்குகள் இரவு பகல் எனப் பாராமல் தம் தம் விருப்பம்போல் வனங்களில் சுற்றித் திரிகின்றனவே! இவற்றைப்போல் மனிதன் ஏன் சுதந்திரமாக வாழக் கூடாது? இவன் ஏன் அடிமையாக, மனம் புண்பட்டுச் சாகவேண்டும்?’ என்னும் கற்பனையில் இவரது உள்ளம் ஆத்ம விடுதலைக் கீதத்தை இசைக்கத் தொடங்கியது. .

இந்தக் கருத்தை வைத்தே ஒரு கவிதை எழுதினார்:

குருவிகள் தம்மிச் சைபோல்

கூடுகள் கட்டி வாழ, மரங்களில் கிளிகள் பேசி

மகிழ்வுற, வனவி லங்கோ இரவினில் பகலில் தந்தம்

- இச்சைபோல் உழல, யாமோ புரைசெறி அடிமை யாகிப்

புண்பட்டோம் கண்கெட் டோமே. இப்படி எழுதிய பாடலை ஒரு பத்திரிகைக்கு அனுப்பினார். விடுதலை’ என்ற தலைப்பில் அந்தப் பாடல் வெளியாயிற்று. காந்தி இயக்கத்தில் ஈடுபாடு

தேச வி டு த ைல க்காக ப் பலர் போராடிக் கொண்டிருந்த க்ாலம் அது. காந்தியடிகள் என்னும் கதிரவன் உதயமாகி அரசியல் வானில் நிகரற்ற ஒளியை வீசத் தொடங்கிய நேரம் அது.

இவரும் காந்தி இயக்கத்தின் ஈர்ப்புக்கு உட்பட்ட இளைஞர் பலரோடு உறவாடத் தொடங்கினார்.