பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/42

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4 I - நாம் அறிந்த கி. வா. ஜ3

சர்க்காவில் நூல் நூற்க ஆரம்பித்தார். அந்த நூலால் நெய்யப்படுகின்ற கதர்த் துணிகளையே உடுக்கத் தொடங்கினார். .

அன்றுமுதல் தம் இறுதிநாள் வரை இவர் கதர்த் துணியைத் தவிர வேறு எதையும் அணிந்ததில்லை.

மோகனூரில் திலகர் வாசககாலை போன்ற சங்க நடவடிக்கைகளிலும் ஈடுபட்டார். ... :

வாசகசாலைக்கு வரும் பத்திரிகைகள் அனைத்தை யும் படிக்கும் பழக்கத்தை வளர்த்துக்கொண்டார், பத்திரிகைகளில் வரும் கவிதைகளைப் படிப்பார். அப்போது பெரும்பாலும் தேசபக்திக் கவிதைகளே வெளிவந்தன. இவரும் சுதந்திர தேவி திருப்பள்ளி யெழுச்சி’, ‘திருக்கோயில்’ போ ன் ற பாடல்களை எழுதினார்.

சேல்த்திலிருந்து தமிழ் நாடு’ என்னும் பத்திரிகை அப்போது வெளிவந்துகொண்டிருந்தது. பழம்பெருந் தேசபக்தர் டாக்டர் வரதராஜுலு நாயுடு. அதனை நடத்தி வந்தார். அவரது பேச்சில் நெருப்புப் பொறி பறக்கும் என்பார்கள். அவரது தமிழ் நாடு’ பத்திரிகைக் கும் இவர் ஒன்றிரண்டு கவிதைகளை எழுதி அனுப்பினார்: சேலத்திற்கே போய்விட வேண்டுமென்ற ஆசையும் இவருக்குத் தோன்றியது. சேலத்தில் அப்போது செல்லம் இருந்தார். தமக்கு வேலை ஏதுமின்றி அங்கே போக இவருக்குத் துணிவு ஏற்படவில்லை. அதன்ால் சேலம் மாவட்டக் காங்கிரஸ் கமிட்டிக்கு ஒரு கடிதம் எழுதினார்: “என்னாலான வேலையைச் செய்கிறேன். எனக்குச் சா ப் பா ட் டு க் கு வேண்டிய சம்பள்ம் கொடுத்தால் போதும்’ என்று அதில் தெரிவித்தார். - “எங்களுக்கு அந்த மாதிரி இப்போது யாரும் தேவை யில்லை. எங்களுக்கு வேண்டிய பணிகளைச் செய்ய

дт— 3