பக்கம்:நாம் அறிந்த கி-வா-ஜ.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சத்குருவைத் தேடி 42

‘இப்பொழுதே பலர் இருக்கிறார்கள்’ என்று அவர் களிடமிருந்து இவருக்குப் பதில் வந்தது. இதனால் இவர்

மிகவும் ஏமாற்றம் அடைந்தார். -

இதுபோல் ஏமாற்றமும் சோர்வும் தலை தூக்கும் போது மோகனூர்க் காவேரிக் கரையை நோக்கி இவர் சென்றுவிடுவார். ஆற்றில் ஒடும் நீரையும், அதில் கரையோரமாக மிதந்துவரும் மஞ்சள் நிற மலர்களையும் பார்த்துக்கொண்டிருப்பதால் இவருக்குப் புத்துணர்ச்சி பிறக்கும். - “ஞான வாள்! -

மோகனூர்க் காவேரிக்கரையில் சுடுகாடு இருக்கிறது. அங்கே பேய் பிசாசு உலவும் என்று சொல்வார்கள்.

ஒரு நாள் ஒரு பெரியவர், டேய் அசடு நேரம் காலம் இல்லாமல் ஆற்றங்கரைப் பக்கம் போகாதே! ஏதா வது பேய் பிசாசு அடிச்சுடும்’ என இவரை எச்சரித்தார்.

தண்ட யுதமும் திரிசூலமும் விழத் தாக்கியுன்னைத் திண்டாட வெட்டி விழவிடு வேன்செந்தில் வேலனுக்குத் தொண்டா கியஎன் அவிரோத ஞானச் சுடர்வடிவாள் கண்டாய்டா அந்தகா வந்துபார் சற்றென் 1 * - (கைக்கெட்டவே * என்கிற பாடலை இவர் படிக்கும்போது, யமன் அருகில் வர, அருணகிரிநாதர், அவன் கை சூலமும் தண்டமும் கீழே விழ, தம் கை வாளினால் ஓங்கி அவனை வெட்டி வீழ்த்துவதுபோல் தம் மனத்தில் உருவம் தோன்றுமாறு கொஞ்சம் கற்பனை செய்து பார்ப்பாராம். உடனே சிரிப்பு வந்துவிடுமாம்:

அதுபோல அந்தப் பெரியவர் பேய்பிசாசு என்று சொல்லி இவரது நெஞ்சத்தில் ஊட்டிய பய உணர்வைப் போக்கிக்கொள்ள முயன்றார். வேண்டுமென்றே உச்சி

。泰 கந்தரலங்காரம்-25,